×
 

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்.. அதிரடி காட்டிய போலீசார்..!

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார்  சுற்றிவளைத்து கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே போதைப் புழக்கத்தை தடுப்பதற்காக பகுதி போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி போலீசார் அந்த பகுதிகளில் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நலையில் உழவர் சந்தை பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இணங்க சுற்றி திரிந்த இளைஞர்களை சுற்றி வெளியிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி, பால்ராஜ் மற்றும் தனுஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்.. மடக்கி பிடித்த போலீஸ்..!

இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து கடைகள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share