×
 

அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..!

தேனி அருகே அக்காவையும், அக்கா மகனையும் இரும்பு ராடால் தாக்கிவிட்டு இருவரும் இறந்து விட்டதாக எண்ணி இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட ஆறாவது வார்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் ஆனந்தி (வயது 40). கணவர் இறந்த நிலையில் 13 வயது மகன் நிஷாந்த் மற்றும் ஆனந்தியின் சகோதரரான பாண்டீஸ்வரன் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர்.

பாண்டீஸ்வரன் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறாது. இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்து வீட்டிற்கு வந்த பாண்டீஸ்வரன், அக்கா ஆனந்தி மற்றும் அவரது மகன் நிஷாந்த் இருவரையும் இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கி உள்ளான். பாண்டீஸ்வரன் தாக்கியதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.  

மேலும் அக்கா மற்றும் அக்கா மகன் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி இளைஞர் பாண்டீஸ்வரனும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் காலை வெகு நேரமாக மூவரும் வெளியே வராத நிலையில்  பாண்டீஸ்வரனின் நண்பர்கள் தேடி வந்து பார்த்த பொழுது  பாண்டீஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையிலும், பாண்டீஸ்வரனின் அக்கா ஆனந்தி படுகாயம் அடைந்த நிலையிலும் மற்றும் அவரது மகன் நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதையும் படிங்க: என்னை எப்படி பதவி நீக்கம் செய்யலாம்..? கொந்தளிக்கும் தாம்பரம் கவுன்சிலர்..!

இதுகுறித்து பாண்டீஸ்வரனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் சம்பவ இடத்திர்கு விரைந்துள்ளனர்.  அங்கு வந்து சோதித்த பொழுது ஆனந்தி படுகாயம் அடைந்த நிலையில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லூர் மற்றும் வடகரை காவல்துறையினர்  தூக்கிட்டு உயிரை மாய்த்து பாண்டீஸ்வரன் மற்றும் அவரது அக்கா மகன் நிஷாந்த் ஆகிய இருவரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரின் இச்செயல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் உடன் பிறந்த அக்கா மற்றும் அக்கா மகனை இரும்பு கம்பியால் தாக்கி ஒருவர் தூக்கிட்டு கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

இதையும் படிங்க: நான் எப்படி சும்மா இருக்க முடியும்..? அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் செங்கோட்டையன் ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share