தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சாய்குமார். 17 வயது சிறுவன். சாய்குமாரும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதை பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாய்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பெண்ணின் தந்தை முத்யம் சதத்தையா இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார்.

ஆனால் அவர்கள் தங்கள் காதலை கைவிட மறுத்து தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இது பெண்ணின் தந்தை முத்யம் சதத்தையாவுக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சமூக அந்தஸ்த்தில் இரு வேறு இடத்தில் உள்ள உங்களின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என முத்யம் சதத்தையா பலமுறை பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் படித்து முடித்து வேலைக்கு சென்றதும் எல்லாம் மாறிவிடும் என சாய்குமார் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... மீண்டும் ஒரு ஆணவப் படுகொலையா?... ஜிம் ட்ரெய்னர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்...!

தான் எச்சரிக்கை செய்தும், காதலை விட மறுத்த ஜோடியால் முத்யம் சத்யா கோவமடைந்தார். ஊராரும் இதுகுறித்து அடிக்கடி முத்யம் சசதத்தையாவிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்யம் சதத்தையா, சாய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையி சாய்குமாருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது நண்பர்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பின்னர் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாட சாய்குமார் அவரது ஊரில் தனியாக ஒரு இடத்தில் ஒன்று கூடினார்.

நண்பர்களோடு விருந்தில் திளைத்திருந்த நேரத்தில், அங்கே மறைந்திருந்த சிறுமியின் தந்தை முத்யம் சதத்தையா கோடரியால் சாய்குமாரை தாக்கிவிட்டு தப்பினார். சாய்குமார் ரத்த வெள்ளத்தில் நடப்பது தெரியாமல் மயங்கி விழுந்தார். அருகில் நின்று இருந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டபடி அலறினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய தங்களது நண்பன் சாய் குமாரை அவரது நண்பர்களும் உறவினர்களும் சுல்தானாபாத் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாய்குமார் இன்று இறந்தார். மருத்துவமனையில் திரண்டிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் தகவல் அறிந்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் இரு சமூக மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கொலை தொடர்பாக வழக்கு பதிந்த பெத்தப்பள்ளி போலீசார், சீமலபேட்டையில் பதுங்கி இருந்த சதய்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் சாய்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது காரில் உள்ள பலூன்கள் (AIR BAG) திறந்ததால் அவர் உயிர் தப்பினார்.

கார் விபத்தில் தப்பிய தங்கள் நண்பன் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை என சாய்குமார் நண்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..!