100 % வலுவானது ..பாதுகாப்பானது ..செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலம் 100 சதவீதம் வலுவாகவும், பாதுகாப்பாகவும் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது என தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்
பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற பணிகளில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே துறை சார்ந்த சேப்டி அதிகாரி கூறியதை அடுத்து சர்ச்சைகள் எழுந்தது
இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ஊடகவியலார்களை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அழைத்து வந்து பாலத்தை பார்வையிட வைத்து ரயில்வேதுறை அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்கு பாலமாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் புதிய பாலத்தில் கடலுக்கு நடுவே சுமார் 100 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது, பழைய பாலத்தை விட மூன்று மீட்டர் உயரமாக இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தான ... மின்னொளியில் ஜொலிக்கும் கண்ணாடி பாலம்