×
 

சென்னை ஐஐடி-யில் நடக்கப்போகும் 2 நாள் அறிவுத்திருவிழா... புதிய கண்டுபிடிப்புகளை பறைசாற்றப் போகும் மாணவர்கள்...

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஐஐடி முக்கியமான ஒன்று.

இந்தியாவில் இப்போது மொத்தம் 23 ஐஐடி-க்கள் உள்ளன.  இவற்றில் 3-வது பழைமையான ஐஐடி என்ற பெருமையை உடையது ஐஐடி மெட்ராஸ். இங்கு படித்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அதிஉயர் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். அறிவியல், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் ஐஐடி-யின் பங்களிப்பு மிக முக்கிய ஒன்று. 

அப்படிப்பட்ட ஐஐடி மெட்ராஸில் வருகிற பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் IInvenTiv-2025 என்ற பெயரில் கல்விசார் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 23 ஐஐடிக்கள், பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் மையம், 31 என்ஐடி-க்கள், 7 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை கட்டமைப்பு பட்டியலிட்ட முதல் 50 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது! 

எத்தகைய முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது என்பது பற்றி தொழில்துறையினரிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் மிகச்சிறந்த தொழில் - கல்வி ஒத்துழைப்பை அடைவதே இதன் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். 300-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் அமைய உள்ளன. மேலும் கடந்த ஆண்டுகளில் இந்த கண்காட்சியில் பங்கேற்று அதன்மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். 

இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளதாக கூறுகிறார் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்கபார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐஐடி மெட்ராஸின் டீன் மற்றும் பேராசியரான மனு சந்தானம் பேசுகையில், இது தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் மற்றும் இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனங்களில் எதிர்கால ஆராய்ச்சி முயற்சிகளுக்கான பாதையை வகுக்கும் என்றார். 

AI/ML தொழில்நுட்பங்கள், விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம்-சுகாதார பொறியியல், கிராமப்புற தொழில்நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி ஆகியவை இந்த கண்காட்சியின் உள்ளடக்கம் மற்றும் கருப்பொருளாகும். 

இதையும் படிங்க: யூஜிசி நெட் மறுதேர்வு தேதி எப்போது தெரியுமா?...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share