உஷார் மக்களே... ஆய்வறிக்கை சொன்ன அதிர்ச்சி தகவல்!!
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் தற்போது துரித உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். காரணம் மாறி வரும் உணவு பழக்கவழக்கம், பணிசுமை, தொழில்நுட்பங்கள் மனித இனத்தை உடல்நலம் பற்றி சிந்திக்கவிடாமல் தடுத்து வருகிறது. நாம் அனைவரும் உடல்நலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நாட்களை கடந்து வருகிறோம். உடலில் பிரச்சனை வரும் போதுதான் நம் கவனம் உடல்நிலை பக்கம் செல்கிறது.
இவ்வாறு இருக்கையில் தற்போது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலர் இதயநோய், உடல்பருமன், சர்க்கரை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தியாவில் அதீத உடல் எடையால் 44 கோடி பேர் அவதியுறுவதாக கூறப்படுகிறது. ஆய்வு ஒன்று இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என்.எல்.சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ICMR) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள் ‘தி லேன்செட்’இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 8.10 கோடியும் பெண்களில் 9.8 கோடி பேரும் அதிக உடல் எடையால் அவதிப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், புதிய ஆய்வின்படி, 2050-இல் இந்தியாவில் 21.80 கோடி ஆண்களும், 23.10 கோடி பெண்களும் அதீத உடல் எடையால் அவதியுறுவர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் அதிக உடல் எடையால் அவதியுறுவோரின் புகலிடமாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. இந்த பட்டியலில் சீனா, இந்தியாவுக்கு அதற்கடுத்தடுத்த இடங்களில், அமெரிக்கா, பிரேஸில், நைஜீரியா உள்ளன. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக மக்கள்தொகை கொண்டிருப்பதால் அதிக உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போப் ஆண்டவர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்: முன் கணிப்பை வெளியிடாமல் தவிர்க்கும் மருத்துவர்கள்