“திமுக கொத்தடிமை திருமாவுக்கு எங்களப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு”... கொந்தளித்த ஜெயக்குமார்!
ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதாக ஆர்.எஸ்.பாரதியும், திமுக அரசும் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்றும், திமுக அரசின் அழுத்தம் காரணமாகவே போலீசார் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்றார்.
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை மற்றும் ஈசிஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவங்களை எல்லாம் பார்த்து நாடே சிரிக்கிறது. ஈசிஆர் சம்பவத்தில் அரசியல் பின்புலம் இல்லை என காவல்துறை கூறுகிறது, ஆனால் அரசியல் பின்புலம் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். இதில் எது உண்மையானது?. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து சந்துரு என்பவரை பிடித்து, சோசியல் மீடியாவில் திமுகவிற்கு தேவையானதை மட்டும் எடிட் செய்து பேசவைத்துள்ளதாக குற்றச்சாட்டிய ஜெயக்குமார், ஈசிஆர் விவகாரத்தில் போலீஸ் மாறி, மாறி தகவல்களை வெளியிடுவதாக கடுமையாக சாடினார். இந்த விவகாரத்தை மூடி மறைப்பதாக ஆர்.எஸ்.பாரதியும், திமுக அரசும் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்றும், திமுக அரசின் அழுத்தம் காரணமாகவே போலீசார் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்றார்.
வேங்கைவயலுக்கு யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லக்கூடிய நிலையில்லை. குறிப்பாக பத்திரிகையாளர்கள் கூட செல்ல முடியவில்லை. இனி வேங்கைவயலுக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட பாஸ்போர்ட் எடுக்க வேண்டியிருக்கும் என திமுக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். மூதாட்டி மரணத்திற்கு அஞ்சலி செலுத்தக்கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. வேங்கைவயல் விவகாரம் குறித்து பேசும் திருமாவளவன், அடிமை சாசனம் எழுத்தப்பட்டது போல் திமுகவிலேயே தான் இருப்பார் என்ற ஜெயக்குமார், திருமாவளவனுக்கு அதிமுகவைப் பற்றி பேசவோ, விமர்சிக்கவோ எந்த முகாந்திரமும் இல்லை, அருகதையும் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: “விட்டா இன்பநிதி காலில் விழுந்திருப்பார்” - அமைச்சர் மூர்த்தியை சரமாரியாக விமர்சித்த ஜெயக்குமார்!
இதையும் படிங்க: 2026ல் தவெகவுடன்- விசிக கூட்டணி... ஆதவ் அர்ஜூனா இணைப்பு… திருமா- விஜய் முன்பே பேசி வைத்த நாடகமா..?