×
 

'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டு ஆடும் அண்ணாமலை..!

தேசிய கட்சியின் அரசியல் என்றால் நம்பிக்கை. எங்களோடு பயணம் செய்கிறீர்கள் என்றால் கடைசி வரை எங்களுடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை  தான்.

பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''பாரதிய ஜனதா கட்சி தீண்டத் தகாத கட்சி. பாஜக  நோட்டா கட்சி. பாஜகவால் தான்  நாங்கள் தோற்றோம் என்று சொன்னவர்கள் எல்லாம். இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி வேண்டும் என்று தவம் இருக்க கூடிய சூழ்நிலையை என்னுடைய ஒவ்வொரு தலைவனும், தொண்டனும் உருவாக்கி இருக்கிறார்கள். நான் பெருமைப்படுகிறேன்... கர்வப்படுகிறேன்.

இன்றைக்கு பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை என் தொண்டன் உருவாக்கி இருக்கிறான். இரவு-பகலாக வேலை செய்து இந்த நிலையை உருவாக்கி இருக்கிறான். மற்றபடி நாங்கள் எந்த கட்சியையும், சிறுமைப்படுத்தி பேசவில்லை. எந்த தலைவரையும் நாங்கள் சிறுமைப்படுத்தி பேசவில்லை. இன்றைக்கு அந்த நிலைமையில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம்.

இதையும் படிங்க: 'இது திமுகவின் அல்லு சில்லு பையலுக வேலை'... போஸ்டருக்கு அண்ணாமலை பதிலடி..!

 அந்த அளவிற்கு உழைத்திருக்கிறோம். ஏற்கனவே சொன்னது போல எந்த கட்சியோடு கூட்டணி? தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி எப்படி இருக்கும்? அதில், முக்கிய கட்சியாக யார் இருப்பார்? யார் தலைவர்? யார் முதலமைச்சர்? அதெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. எங்களுடைய நோக்கம் பாஜகவை முன்னிறுத்த வேண்டும். நல்லா கேட்டுக் கொள்ளுங்கள்... தமிழ்நாட்டின் அரசியலை 5 வருடம் உற்று நோக்குங்கள்.

பாரதிய ஜனதா கட்சியால் தான் தோற்றம். பாஜகவுடன் சேர்ந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம். பாரதிய ஜனதா கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜக நோட்டா கட்சி என்று கூறி வந்தார்கள். அதைத் தாண்டி இன்றைக்கு தலைவர்கள் பேசுகிற வார்த்தைகளை மதிப்பீடு செய்யுங்கள். சரியான நேரத்தில் கூட்டணியை பற்றி பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அமித்ஷா இருக்கிறார். மோடி இருக்கிறார். புது தேசிய தலைவர் வரப்போகிறார்.

 பேசுகின்ற நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை பற்றி பேசும். இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது. பலம் ஆகிக்கொண்டிருக்கிறது. எங்களை நம்பி பல தலைவர்கள் இருக்கிறார்கள். டிடிவி தினகரன் உட்பட எங்களை நம்பி பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த கூட்டணியில் பாஜக நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். கஷ்டமான நேரத்தில் வருவார்கள்.  ஒரு தேசிய கட்சி அப்படி அரசியல் செய்ய முடியாது. தேசிய கட்சியின் அரசியல் என்றால் நம்பிக்கை. எங்களோடு பயணம் செய்கிறீர்கள் என்றால் கடைசி வரை எங்களுடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை  தான்.

அதைக் கொண்டுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை பிடித்திருக்கிறோம். இன்னைக்கு வாருங்கள், நாளைக்கு காலையில் பஸ்ஸில் கொண்டு போய் இறக்கி விடுகிறோம் என்று பாரதிய ஜனதா கட்சி எப்போதும் நடந்து கொள்ளாது'' என அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'திமுக-வின் பொய் அரசியலை சல்லி சல்லியாக உடைப்பேன்...' சபதம் போட்ட அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share