×
 

கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!

முதல்வர் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு கலர் துப்பட்டாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இதில் இருந்தே கருப்பை பார்த்து முதல்வர் பயந்து உள்ளார் என்பது தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சட்டபேரவை நுழைவாயிலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திதார்,அப்போது பேசிய அவர் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை படிக்காமல் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை படித்துள்ளார். அரசு தயாரித்து தரக்கூடிய உரையை ஆளுநர் படிக்கிறார்.
இந்தாண்டு ஆளுநர் உரையில் அரைத்த மாவே அரைத்து உள்ளனர். புதிய திட்டங்கள் இல்லை எனவும் எந்த திட்டத்தையும் நடைமுறை படுத்த வில்லை எனவும் தெரிவித்தார்.

தரமான கல்வியை வழங்குவோம் என கூறி 500 அரசு பள்ளிகளை மூடுகிறார்கள்.அதிமுக ஆட்சியில் கல்வி சிறப்பாக இருந்து.கிராம சாலைகளில் பெயர் மாற்றம் செய்து முதல்வரின் பெயர் மாற்றி உள்ளனர். பெயர் மாற்றம் தான் இவர்களது சாதனையாக உள்ளது. தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார் எப்போதும் வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திககலாம் என கூறினார் ஆனால் இன்று அப்படி இல்லை.
நேற்று கூட முதல்வர் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு கலர் துப்பட்டாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இதில் இருந்தே  கருப்பை பார்த்து முதல்வர் பயந்து உள்ளார் என்பது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகமாக உள்ளது. அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பல முறை புகார் கொடு்த்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. போதை மாநிலமாக உள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் விழிப்போது இல்லை. செயல் அற்ற அரசு இது.தமிழகத்தில் சிறுமி முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.யார் அந்த சார் என கேட்டால் ஏன் பயப்பிடுகிறார்கள்.
ஆளுநர் புறகணித்து செல்ல வில்லை திட்டமிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றார்

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி இரண்டு மூன்று முறை திமுக அரசின் அவலங்களை ஆளுநர் சந்தித்து மனு அளித்தோம்.தாமாக நீதிமன்றம் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறது என்றால் அதற்கு அதிமுக தான் காரணம் என்றார்

இதையும் படிங்க: முதல் நாளே அதகளமாகப்போகும் சட்டப்பேரவை; அவையை அதிரவைக்கப் போகும் அதிமுக!

 

இதையும் படிங்க: உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share