"அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !
அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர் என புஷ்பா பட பாணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுக்கூட்டத்தில் சுவாரஸ்ய பேச்சு
அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" என புஷ்பா பட பாணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுக்கூட்டத்தில் சுவாரஸ்ய பேச்சு
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது .அதில் கலந்துக்கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி யாரைப் பார்த்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என சொல்வது பேஷனாக ஆகிவிட்டது எனக் கூறிவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார் ஒரு அமைச்சர் , அவருக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன் என கூறிய அவர் புஷ்பா சினிமாபடத்தை சுட்டிக்காட்டி "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" என்பதைப் போல இந்த கூட்டத்தை பார்க்கிறேன்" அம்பேத்கர் எல்லோரும் உயர்த்தி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். எல்லோரும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார்
இதையும் படிங்க: அமைச்சர் பதவி தராவிட்டால்...? மிரட்டும் முக்கியத் தலைவர்... அடித்து ஆடும் பாஜக..!