×
 

ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..!

ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க வேண்டும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் வீடுகளுக்கு மொட்டை மாடியில் சூரிய மின் சக்தி அலகுகளை நிறுவ வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மின்சார புரட்சியை முன்னெடுக்கும் முயற்சியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், விலை குறைவில் மின்சாரத்தை அளிக்கும் நோக்கிலும் ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் சூரிய மின் சக்தி அலகுகளை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி.. சித்தூர் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!

ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் தலைநகர் அமராவதியில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, பிரதம மந்திரியின் சூரியக்கர் மற்றும் முஃப்ட் பில்லி யோஜனா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். இது ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான சூரிய மின் சக்தியை எளிதில் அணுகக்கூடிய மாற்றுமுறை என்றும் மத்திய அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

இதனுடைய பலன்களை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களை அவர் நேரடியாக வலியுறுத்தினார். இந்த திட்டத்தால் பொதுமக்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் அதே நேரத்தில் மின் நுகர்வோர் ஆகவும் சிறந்த வாய்ப்பு இது என அவர் வர்ணித்தார்.

ஒவ்வொரு தனிநபரும் மின்சாரத்தை உற்பத்தி செய்து மீதமுள்ள மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு நல்ல விலைக்கு விற்கலாம், இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள் குறித்தும் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் பேசினார். 

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 20 லட்சம் வீட்டு மாடியில் சூரிய மின் சக்தி பேனல்களை நிறுவும் தீவிர இலக்கை அடைய வேண்டும் எனவும், இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக திகழும் என்றும் சந்திரபாபு தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை மானியமும் மற்றும் 25 லட்சம் பட்டியலின மக்களின் வீடுகளுக்கு இலவசமாகவும் இந்த சூரிய மின் சக்தி திட்டத்தை நிறுவ உள்ளதாக கூறினார். 

ஆந்திர முதலமைச்சரின் இந்த புதுப்பிக்கத்தக்க இரு சக்தி திட்டம் மிகவும் அற்புதமானது. சூரிய காற்று மற்றும் உயிரி எரி சக்தி திட்டங்கள் மூலம் 160 ஜிகாவாட் பசுமை மின்சாரத்தை உருவாக்க ரூபாய் பத்து லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களால் 9000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share