×
 

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம்... அதிகாரிகளிடம் இருந்து ரூ.25லட்சம் வசூலித்து கொடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த அதிகாரிகளிடமிருந்து இந்த 25 லட்ச ரூபாய் தமிழக அரசு வசூலித்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

இதையும் படிங்க: வலிப்பு நாடகம் ஆடிய ஞானசேகரன் - உண்மையை கண்டுபிடித்த மருத்துவர்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அடுத்த நாள் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அண்ணா பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி அடிப்படையில் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அது இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன.

முதல் தகவல அறிக்கையில்,  ‘‘நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து,’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

போதாததற்கு  ‘‘மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.

மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்’’ என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.

ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், 25 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டு இருந்தனர். 

அதேபோல, உரிய அனுமதி பெறாமல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய காவல் ஆணையர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் ஆணையர் குறித்து உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானது குறித்த எஃப்ஐஆர் லீக் ஆனதுக்கு காரணமானவர்கள் 25 லட்ச ரூபாய் வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.

பதிக்கப்பட்ட மனைவியை கூட்டத்திற்கு காரணம் எனக் கூறுவது குற்றவாளிக்கு சதகமான சூழ்நிலை ஏற்படுத்தும். எஃப் ஐ ஆர் லீக் ஆனதால் தான் மாணவி மீது மற்றவர்கள் குற்றம் சாட்டும் கொடுமை அரங்கேறி உள்ளது. மாணவியின் செயல்தான் காரணம் என்பது போல் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தான் குற்றம் நடைபெற காரணம் என சமூகத்தில் கருத்துகள் கூறப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது’’என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share