ஆணவம் நல்லதல்ல.. முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநர் மாளிகை அட்டாக்!
இந்தியாவை ஒரு தேசமாக; இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று தமிழக ஆளுநர் மாளிகை ராஜ் பவன் விமர்சித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட வேண்டும் என்பது மரபு. அதன்படி தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தார். ஆளுநர் உரைக்கு முன்பாகத் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி அவையிலிருந்து வெளியேறினார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் ஆளுந்தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விமர்சித்து சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்து அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக திமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து சமூக வளைத்தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது.
அதில், "தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார்.
இந்தியாவை ஒரு தேசமாக; இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
இதையும் படிங்க: சீமானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் சோகம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்!
இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசா? தேர்தல் திட்டமா? கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை ஒரு ரிவைண்டிங்...