8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
கல்யாணமான எட்டு மாசத்தில் தாங்க முடியாத கொடுமை , வயிற்றில் நான்கு மாத சிசுவுடன் இளம்பெண் விபரீத முடிவு எடுத்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது
கல்யாணமான எட்டு மாசத்தில் தாங்க முடியாத கொடுமை , வயிற்றில் நான்கு மாத சிசுவுடன் இளம்பெண் விபரீத முடிவு எடுத்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது
தூத்துக்குடி கேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ம துரை. இவரது கடைசி மகள் முத்தாரம்மனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் என்பவருக்கும் கடந்த மார்ச் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது கட்டிட தொழிலாளியான கிருஷ்ண பெருமாள் திருமணம் ஆன நாள் முதல் முத்தாரம்மனை கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது
கணவரும் மாமியாரும் அடித்து துன்புறுத்திய நிலையில் இருவர் மீதும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்தாரம்மன் புகார் அளித்து அங்கு நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்
இதையும் படிங்க: அப்பா ஓடிடு ..அம்மா குத்த போறாங்க .. கணவரின் முதுகில் கத்தியை சொருகிய மனைவி ..!
இந்த நிலையில் முத்தாரம்மன் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தும் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார் கணவர் . இதனால் இனி இவ்வுலகில் வாழ விருப்பம் இல்லாமல் தனது வயிற்றில் வளரும் சிசுவை பற்றியும் கவலைப்படாமல் தூக்கில் தொங்கி உள்ளார் முத்தாரம்மன் .தனது மகளின் சாவுக்கு காரணமான மாமியார் மற்றும் அவரது கணவர் இருவர் மீதும் தந்தை சேர்ம துரை அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: சென்னையை அலறவிட்ட முதியவர் ..நள்ளிரவில் பற்றி எரிந்த வாகனங்கள்..அதிரவைக்கும் காரணம்