யார் அந்த சார்..? 3 பொண்டாட்டி... டான்ஸ் ஆட வந்த பெண்ணுடன் டாவு... பிரியாணி ஞானசேகரனின் கசமுசா கருமங்கள்..!
ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும்போது இவனுக்கு இதுஎல்லாம் எதுக்கு..?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எனும் நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு தொடர் குற்றவாளி. அவர் இந்தியாவின் உயர்தரமான பல்கலைக்கழகமொன்றின் வளாகத்தில் சர்வ சாதாரணமாக நடமாடியுள்ளதும், கொடூரமான குற்றத்தை அரங்கேற்றியுள்ளதும் பாதுகாப்பு குறைபாடுகளைத்தான் காட்டுகிறது.
‘‘அந்த வீடியோவை பெற்றோர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வீடியோவை காட்டட்டுமா? இல்லையென்றால் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். போனில் பேசும் சாருடன் உடன் ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டியதாக தன்னை பாலியல் பலாதாரம் செய்த மாணவி எஃப்.ஐ.ஆரில் தெரிவித்து இருந்தார். மாணவியின் இந்த புகாரையடுத்து ஞானசேகரன் கூறிய அந்த சார் யார்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
" அந்த SIR யார் " ? என காவல்துறை ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.
‘‘அப்படி யாரும் இல்லை. அந்த பெண்ணை மிரட்டுவதற்காக பொய் சொல்லி இருக்கிறான் ஞானசேகரன்’’ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!
இந்நிலையில் ஞானசேகரன் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புதிய விளக்கமொன்றை தெரிவித்துள்ளார்.
‘‘கைதான ஞான சேகரனின் மனைவி அண்ணா பல்கலையில் பணியாற்றுகிறார். அவரை விட, அழைத்துச்செல்ல அடிக்கடி ஞானசேகரன் வந்துசென்றுள்ளார். அண்ணா பல்கலை., வளாகத்திற்குள் குற்றவாளி ஞானசேகரன் அடிக்கடி வந்து செல்லும் பழக்கம் உடையவர் என்பதால், அவர் மீது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் போனது என பல்கலை., காவலாளிகள் கூறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பிரியாணி ஞானசேகரன்..?
பிரியாணி ஞானசேகரன் தொடர்பாக அவரது பக்கத்து வீட்டு பெண்மணி கூறுகையில், "இந்த ஏரியாவில் பிரியாணி கடை வைச்சிருக்கார். பிரியாணி ஞானசேகரனுக்கு இரண்டு பொண்டாட்டிகள். அடுத்தும் ஒரு பொண்டாட்டியைக் கட்டியிருக்கான்னு சொல்றாங்க. மூன்று பொண்டாட்டிகளும் நிரந்தரமாக இல்லை. இரண்டுதான் இருக்கு.
ஞானசேகரன், அவங்கம்மா, ரெண்டு பொண்டாட்டி எல்லோரும் ஒண்ணாத்தான் இருக்காங்க. அவங்க சின்ன பையன் மட்டும் தான் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கான். பெரியவன், பெரியவன் பொண்டாட்டி இரண்டுபேர், அவங்க அம்மா கூட இருந்தாங்க. ரவுடித்தனம் பண்ணிட்டுக் கிடந்தான்.
கொஞ்ச நாள் நல்லாத்தான் ஓடிக்கிட்டு இருந்தது. பரவாயில்ல திருந்தியிருக்கிறான்னு நினைச்சோம். பிரியாணி வியாபாரம் செய்றான். சர்ச், கோயிலுக்குப் போனான். அப்பம் கொடுக்கும்போது ஃபேமிலியாக போவான். வருவான். ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கான். கோயில் திருவிழாக்கள்ல வந்து டான்ஸ் ஆடுவாங்கள்ல. அதில் ஒரு பொண்ண மூன்றாவதாக சேர்த்துக்கிட்டான்.
ஆனா கல்யாணம் பண்ணிக்கல. இரண்டு பொண்டாட்டி வைச்சிருந்தாலும் ஒழுங்காக தான் வைச்சிருக்கான்னு நாங்க நினைச்சிருந்தோம். இப்ப திரும்பவும் கடைசியில் இப்படி ஆகிப்போச்சு. ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும்போது இவனுக்கு இதுஎல்லாம் எதுக்கு..? அந்த பச்சப்புள்ள (பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி) என்ன பாடு பட்டு இருக்கும்?’’ என அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளார் ஞானசேகரனின் பக்கத்து வீட்டுப் பெண்மணி.
இதையும் படிங்க: யார் அந்த சார்..? மாணவியின் தோழியிடமும் ஞானசேகரன் பாலியல் சீண்டல்... செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்..!