நாவடக்கமே இல்லை.. ரொம்ப அநாகரிகம்.. சுயநினைவற்றவரைப் போல பிதற்றி திரியும் அண்ணாமலை..! ஷாப்ட் ஆக பொங்கும் மா.சு..!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தமாக நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நபர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாடா,போடா என்று ஒருமையில் அண்ணாமலை பேசியதிலிருந்து அரசியல் களத்தில் பரபரப்பு சூடும் தொற்றிக் கொண்டது, இதற்கு திமுகவிலிருந்து பல தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சுயநினைவற்றவரை போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை, முதலமைச்சர் மற்றும் துணை அமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரிகத்தின் உச்சம் நாவடக்கமற்றவர், அநாகரிகமானவர் என்பதை தொடர்ந்த அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா
இதேபோன்று கொளத்தூரில் செய்தியாளர் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலையை களத்தில் நின்று வெற்றி பெற செய்து காட்டச் சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு சும்மா வாய் வார்த்தையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது, திமுகவின் கடைகோடி தொண்டனை விட்டு அண்ணாமலையை தோற்கடிப்போம் என தெரிவித்தார்.
இதேபோன்று திமுக மாணவர் அணி தலைவரான ராஜீவ் காந்தி பேசும் போது நாம் கேட்பது மத்திய அரசின் அப்பன் வீட்டு சொத்தை அல்ல, நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை அதை கேட்டால் அண்ணாமலை உரிமையில் பேசுகிறார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான விமர்சனத்தை இல்லை, இல்லை விஷமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என திமுக மாணவர் அணி தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று திமுக பேச்சாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை கருத்து தொடர்பாக தங்களது கருத்துக்களை, கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்
இதையும் படிங்க: 'பஞ்சாயத்தை முடித்துக் கொள்வோமா உதயநிதி..? ஆனால், ஒரு சவால்..! அடங்காத அண்ணாமலை..!