×
 

திருட்டு மாடல் கிளப்பும் பிரச்சினை.. கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா.? மு.க.ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா ஆவேச அட்டாக்.!

உங்கள் அரசியல் கோமாளித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தன் ஆட்சியின் தவறுகள், ஊழலை மறைக்க மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களைப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக  மூத்த தலைவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "உங்கள் திருட்டு மாடல் அரசு சம்பந்தமில்லாமல் ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறது என்றாலே, எதையோ மூடி மறைத்து மக்களை மடைமாற்றத் துடிக்கிறது என்றுதானே அர்த்தம்? மும்மொழிக் கொள்கை எதிர்ப்புக்கு பின்னால் டாஸ்மாக் மெகா ஊழல் ஒளிந்து இருந்ததைப் போல. கர்நாடக அரசிடம் முறையிட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய குடிநீரைப் பெற்றுத் தர துணிவற்ற நீங்கள், கேரளா அரசைக் கண்டித்து தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த திராணியற்ற நீங்கள், அவர்களை இணைத்துக் கொண்டு தமிழக உரிமைகளை காக்கப் போகிறீர்களா? என்ன பித்தலாட்டம் இது?

இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!



மேலும், தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் இருக்காது எனவும், அதனால் எந்த மாநிலத்தின் தொகுதிகளும் குறைக்கப்படாது எனவும் நமது பிரதமர்  நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெளிவாக்கிய பிறகும் கூட நீங்கள் இப்படிக் கூட்டம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காக? உண்மையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று கூறியது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், நியாயப்படி அவர்களைத் தானே நீங்கள் எதிர்க்க வேண்டும்?



ஆனால், திருடன் கையில் சாவி கொடுப்பதைப் போல காங்கிரசாரின் கூற்றை எதிர்த்துப் போராட அவர்களையே அழைத்துள்ளீர்களே, உங்கள் அரசியல் கோமாளித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே" என்று ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊழலை மறைக்க தொகுதி மறுவரையறையைப் பூதாகரமாக்கும் திமுக... மு.க.ஸ்டாலினை விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share