×
 

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..! புதிய திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்..!

2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டு பேசினார்.

இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!

கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். மேலும், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற ஆர்வத்துடன் உள்ளனர்.

 17ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில் குறிப்பாக விவசாய நிலங்களில் தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகளை அமைக்க மானியங்கள் வழங்கப்பட்டன. இது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

மேலும், மண்ணுயிர் காப்போம் திட்டம்: மண்ணின் உயிர்ச்சத்து மற்றும் பயிர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் என்னென்ன புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும்.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share