'ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வரானவர் எங்களுக்கு வகுப்பெடுக்கலாமா..?' எடப்பாடியாருக்கு செந்தில் பாலாஜி சம்பட்டி அடி..!
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி
‘அரசியல் வியாபாரி’ என தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி. “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்’’ என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.
நேற்று அதிமுக பொதுச்செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ''அமைதிப்படை அமாவாசை என்பது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தான் பொருந்தும். 5 கட்சிக்கு போய் வந்தவர் அவர் தான். ஒரே 5 ஆண்டில் இரண்டு கட்சிகளின் சின்னத்தில் நின்ற பெருமைக்குரியவர் அவர்தான். இதையெல்லாம் மறந்து பேசுகிறார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசியது சட்டசபைக் குறிப்பில் இருக்கிறது. யாராலும் நீக்கவே முடியாது. இன்னொரு அமைச்சர் சேகர்பாபு. அவரும் அமாவாசை பற்றி பேசி வருகிறார். நான் அமாவாசையை பற்றி பேசுவது உண்மைதானே. ஒவ்வொரு மாதமும் கழிய கழிய திமுக ஆட்சியின் முடிவும் நெருங்கி வருகிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சி முடிய 13 அமாவாசைதான் இருக்கு.. திமுகவை பொளக்கும் பழனிச்சாமி!
சேகர்பாபு அதிமுகவில் இருந்து போது திமுக பற்றி பேசியது அவைக்குறிப்பில் இருப்பதை மறந்து பேசி வருகிறார். இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான அரசியல்வாதிகள் ஒரே கட்சியிலேதான் இருப்பார்கள். அதிமுகவில் 51 ஆண்டுகாலமாக இருக்கிறேன். பதவி இல்லாதபோதும், வாய்ப்பு கிடைக்காதபோதும் கட்சியில் விசுவாசமாக இருந்ததால் தான் இன்றைக்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். இவர்கள் அப்படி அல்ல. கடைசி காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலை கருதி வேடந்தாங்கல் பறவை போல சீசனுக்கு ஏற்ற போல வருபவர்களுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது'' என கடுமையாக விமசர்சித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு பதிலடி கொடுத்து தமிழக மின்சாரம், மது விலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம். தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி எடப்பாடி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அட.. அந்த செந்தில் முருகனாப்பா இவரு..? ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கி கிச்சுக் கிச்சு மூட்டும் அதிமுக பிரமுகர்..!