×
 

பணமில்லா சிகிச்சை! விபத்தில் சிக்கியோருக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த நிதின் கட்கரி..

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு 7 நாட்கள் வரை அல்லது ரூ.1.50 லட்சம் வரை செலவுகளை அரசை அளிக்கும் “பணமில்லா சிகிச்சை” திட்டத்தை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டத்தின்படி ரூ.1.50 லட்சம் அல்லது 7 நாட்களுக்கான மருத்துவச் செலவுகளை அரசை விபத்தில் பாதிக்ககப்பட்டோருக்கு வழங்கும். விபத்து நடந்த 24 மணிநேரத்துக்குள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் இந்த மருத்துவச் செலவுகளை அரசை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் சாலை விபத்தில் சிக்கி துரதிர்ஷ்டமாக உயிரிழப்பு ஏதும் நேரிட்டால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக உடனடியாக ரூ.2 லட்சத்தையும் மத்திய அரசு வழங்கும் என்றும் நதின் கட்கரி தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களின் போக்குவரத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.


அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் “ பணமில்லா சிகிச்சை எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சாலை விபத்து நடந்த 24 மணிநேரத்துக்குள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான ஒருவாரத்துக்கான மருத்துவச் செலவு அல்லது ரூ.1.50 லட்சத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கும்.
சாலை விபத்தில் ஹிட்அன்ட் ரன் வழக்குகளி்ல் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக ரூ.2 லட்சம் நிவாரணத்தையும்  அமைச்சகம் வழங்கும். சாலைப் பாதுகாப்புக்கு மத்திய அரசு உச்சபட்ச முன்னுரிமை வழங்குகிறது. ஏனென்றால், 2024 ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.80 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இரு சக்கரவாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியால் சென்று உயிரிழந்தவர்கள் மட்டும் 30ஆயிரத்துக்கும் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதில் முக்கியமானது சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில்  66 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட பிரிவினர்.  பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிலையங்களுக்கு அருகே சாலைகளை குழந்தைகள்  கடக்க முடியாமலும், சரியான நுழைவு வசதி, வெளியேறும் வசதி இல்லாமலும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும்  விபத்தில் சிக்கி 10ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிங்க: திருமணமான 2 மாதத்தில் இப்படியா? - தலையில் அடித்துக்கொண்டு கதறும் பெண் சப் இன்ஸ்பெக்டரின் குடும்பம்!


குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ,மினிபஸ்களுக்கு ஏற்கெனவே தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அதன் மூலம் குறிப்பிட்ட அளவு விபத்துகள் நடக்கின்றன” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: இரண்டு விபத்துகளில் இருவர் பலி, காசிமேட்டில் கொலை- புத்தாண்டு நள்ளிரவு நிகழ்வுகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share