×
 

பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்..10 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. கம்பி எண்ணும் ஒருதலைக் காதலன்..!

கரூர் அருகே, காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண் வீட்டார் மறுத்த நிலையில், பெண்ணை வேனில் கடத்தி சென்ற ஒருதலைக்காதலன், அவனது தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (மார்ச் 10) வழக்கம் போல அந்த மாணவி கல்லூரிக்கு சென்றுள்ளார். கரூர் ஈசநத்தம் சாலையில் உள்ள பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மாணவி, சக மாணவிகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆம்னி வேனில் வந்த சில இளைஞர்கள் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக செய்தி வெளியானது. பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் சகோதரி, தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். 

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா IPS., உத்தரவுப்படி காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கரூர் நகரம் மற்றும் கரூர்  ஊரக உட்கோட்டம், பசுபதிபாளையம் காவல் வட்ட ஆய்வாளர் மற்றும் கரூர்  நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமிரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து பல்வேறு இடங்களில் விசாரணையை தீவிர படுத்திய போலீசார், கல்லூரி மாணவியை காதலித்து வந்த ஈசநத்தம் அருகே கட்டட தொழிலாளி நந்தகோபால் என்ற இளைஞர் மீது சந்தேகம் கொண்டனர். 

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!

அதன் பின்னர் நந்தகுமாரின் செல்போன் சிக்னல்களை கொண்டு, பின் தொடர்ந்த போலீசார் திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே மாணவி இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு நந்தகோபாலை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்தாக நந்தகோபாலின் தாய் கலா, பாட்டி பொன்னம்மாள், உறவினர்கள் சரவணன், பழனிசாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் நந்தகோபால் என்பவர் கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக மாணவியை காதலித்து வந்தது தெரிந்தது.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவியின் வீட்டிற்கு நந்தகோபால் பெண் கேட்டு சென்றுள்ளார். மாணவிக்கு தந்தை இல்லை. மாணவியின் அக்காவின் கணவர்தான் பெண் கேட்டு வந்தவர்களிடம் பேசி உள்ளார். அவர் நந்தகோபாலுக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும் நந்தகுமார் தொடர்ந்து மாணவியை காதலித்து வந்துள்ளார். மாணவியின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து சமூகவலைத்தள பக்கத்தில் நந்தகுமார் வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நந்தகுமாரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே தான் பேருந்துக்காக காத்திருந்த மாணவியை வலுக்கட்டாயமாக நந்தகுமார் ஆம்னி வேனில் கடத்தி உள்ளார். அவருக்கு நந்தகுமாரின் தாய் மற்றும் நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்.. கூச்சலிட்ட மாணவியின் கழுத்தை அறுத்த கும்பல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share