ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ.498.8 கோடி ஒதுக்கீடு!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி ரூபாய் நிவாரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி ரூபாய் நிவாரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களை பெஞ்சல் புயல் தாக்கியது.அதற்கான நிவாரணம் தற்போது ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு அடிப்படையில் ஏற்கனவே அதற்கான நடவடிக்கையை மாவட்டவாரியாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு அவர்கள் பலன் பெறக்கூடிய வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு செய்து முதலமைச்சர் முகா ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 5 லட்சத்து 18000 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது விவசாயிகள் பெருமளவுக்கு பாதிப்பு பாதிக்கப்பட்டு இருந்தன. இந்த மாவட்டங்களில் எல்லாம் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் துறையினுடைய செயலாளர்கள் கண்காணிப்பு அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளுடைய பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதனுடைய கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு தற்போது அவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தோட்டக்கலை பயிர் உள்ளிட்ட மாணவரி பயிர் உள்ளிட்ட அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு மானாவரி பயிருக்கு ஒன்றுக்கு 8,500 ரூபாயும், அதேபோன்று நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17000 ரூபாயும், நீண்ட கால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 22500 நிவாரணம் என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஏ.கே.செங்கோட்டையன்... முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்...!
மேலும் விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி,அரியலூர்,செங்கல்பட்டு,கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் 323 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உள்ளிட்ட இந்தநிவாரணம் அனைத்தும் வழங்குவதற்கான நடவடிக்கையும் வேளாண் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இதை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: “இன்னம் ஐந்தே வருஷத்துல...” நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்...!