×
 

அம்ரித்சர் வந்த நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. அமெரிக்க ராணுவ விமானத்தில் பயணம்

அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்கள் 200க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு ராணுவ விமானம் சி-17 மூலம் நாடு கடத்தப்பட்ட நிலையில் இவர்கள் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகருக்கு வந்து சேர்ந்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியில் தீவிரமாக இருந்து வருகிறார். அதில் முதலாவதாக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோ நகரில் இருந்து அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள ராம்தாஸ் ஜி சர்வதேச விமானநிலையத்தில் இன்று பிற்பகலில் தரையிறங்கினர். நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்களில் பஞ்சாப் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.


அமிர்தசரஸ் வந்திறங்கிய இந்தியர்களிடம் முறையான ஆவணங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்படும். இவர்களை எங்கு அனுப்ப வேண்டும் என்ற எந்த உத்தரவும் இல்லை என்பதால், பரிசோதனை, ஆய்வுகள் முடிந்தபின் அவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல் கவுதமேளா, பெரு, ஹோன்டுராஸ் நாட்டுக்கும் அந்நாட்டைச் சேர்ந்தவர்களை நாடு கடத்த ராணுவ விமானங்களை அமெரிக்க அரசு பயன்படுத்துகிறது. 
இந்தியப் பிரதமர் மோடி வரும் 12 மற்றும் 13ம் தேதி அமெரிக்காவுக்கு பயணிக்க இருக்கும் நிலையில் இந்தியர்களை நாடுகடத்தியுள்ளது அமெரிக்கா. இந்தியர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டநிலையில் எல்லைப் பாதுகாப்பு, குடியேற்றச் சட்டம், சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களை அனுப்புதல் ஆகியவற்றில் கடுமையாக நடப்போம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2வது முறையாக அதிபராகப் பதவி ஏற்றுள்ள நிலையில் அவரின் கொள்கைகளுக்கு துணையாக இந்தியா இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முடிவில் இந்தியா தலையிடாது. எது சட்டப்படி சரியானதோ அதை செய்யலாம் என மத்திய அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது

இதையும் படிங்க: இந்தியர்களை ஏற்றிக் கிளம்பிய விமானம்… அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறியவர்களுக்கு கல்தா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share