×
 

கொலை செய்துவிட்டு சாலை விபத்து என நாடகமாடிய தாய், மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

தருமபுரியில் நள்ளிரவில் அரங்கேறிய கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தாசன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணி. நாடக கலைஞர் ஆன இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று ஊர் பாலம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதுமட்டுமின்றி தலை, முகம் மற்றும் உடல்களில் காயங்கள் நிறைந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் மணியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டு அவர் துடிதுடிக்க உயிரிழந்திருப்பதாக உடற்கூறாய்வில் வந்தது.

இதையும் படிங்க: நிஜத்தில் நடக்கும் ஜெய்பீம் சம்பவம்.. விசாரணைக்காக அழைத்து சென்றவர் எங்கே? கணவரை கண்ணில் காட்டக்கூறி பெண் கண்ணீர்..!

இதனை அடுத்து மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் உறுதி செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் இதற்கான எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் வழக்கை தொடங்கிய இடத்திலேயே நின்றிருந்தனர். தொடர்ந்து, போலீசார் மணியன் செல்போன் நம்பரை ட்ராக் செய்த போது, சந்தேகிக்கும் படி பெண் ஒருவரின் செல்போன் நம்பர் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணுடன் மணி அதிக நேரம் போனில் பேசி வந்திருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்தப் பெண்ணின் நம்பரை ஆய்வு செய்த போது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் காமாட்சியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது காமாட்சியை நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். அப்போது காமாட்சி நீண்ட காலமாக மணியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காமாட்சி வீட்டிற்கு சென்ற மணி காமாட்சியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த காமாஜியின் மகன் பழனிச்சாமி இருவருக்கும் மேற்பட்ட தகராறு விளக்கி விட சென்றுள்ளார். அப்போது மணி ஆவேசத்தில் வார்த்தைகளை வீசவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, வீட்டு அருகே இருந்த கட்டையால் மணியை தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசிடமிருந்து தப்பிக்க தாய் காமாட்சி மற்றும் பழனிச்சாமி மணியின் உடலை விபத்து ஏற்பட்டது போல் காயப்படுத்தி சாலை ஓரத்தில் விட்டு சென்றுள்ளனர். இந்த உண்மை போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை எடுத்து போலீசார் தாய் மற்றும் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்துவிட்டு, சாலை விபத்து என தாய் மற்றும் மகன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share