திமுக., எம்.பி-யின் அண்டப்புளுகு..! ' ஜனாதிபதி தாழ்த்தப்பட்டவர் என்பதால் கும்பமேளாவில் அனுமதிக்கவில்லை..?
ஒரு ஜனாதிபதியை சாதியைச் சொல்லி ஒதுக்குகிறார்கள் என்கிற மாபெரும் குற்றச்சாட்டை வைக்கும்போது திமுக எம்.பி ஜெகத் ரட்சகன் இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளலாமா?
''உத்திரப்பிரதேச மாவிலம், பிரக்யாராஜி நடைபெற்ற மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி கும்பமேளாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதுதான்'' என திமுக, எம்.பி.ஜெகத ரட்சகன் பேசியுள்ளது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து அவர் ஜெகத்ரட்சகன், ''உத்தரபிரதேசத்தில், மகா கும்பமேளா நடைபெற்றது. நானும் போயிருந்தேன். மனசு கேட்கவில்லை. ஏனென்றால் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்று சொன்னார்களே என்று சென்றேன். 66 கோடி மக்கள் வந்தார்கள். அங்கே பார்த்தீர்கள் என்றால் கடுமையான கூட்டம். நல்ல ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். நான் போய் கங்கையில் குளித்தேன். தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சரி பரவாயில்லை 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது என்று நானும் குளித்து விட்டு வந்தேன்.
எல்லோரும் வந்தார்கள். நமது பாரத பிரதமர் வந்தார். எல்லா மக்களும் வந்தார்கள். இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக இருக்கக்கூடிய தலைவர் மட்டும் அங்கு வரவில்லையே... ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர் அவரை அங்கே அனுமதிக்கவில்லை. இதற்கு காரணம் புரியவில்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அங்கே ஒரு தந்தை பெரியார் அவர்கள் பிறக்கவில்லை... அங்கே திராவிட ஆட்சி நடத்தக்கூடிய தளபதி அங்கு இல்லை. ஜனாதிபதி என்றால் சாதாரணம் கிடையாது. அவர் கையெழுத்துப் போட்டால்தான் எல்லா கெசட்டுகளும் வெளியாகும்.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் ஜெலன்ஸ்கியின் சொத்து மதிப்பு… அதிபராக மாறிய காமெடியன்..!
முப்படைகளுக்கும் தலைவராக இருக்கக் கூடியவர். அன்றைக்கு அவர் ராமர் போகிறார். கோயிலுக்குள் விடமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். ஜனாதிபதியையே உள்ளே விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வடநாட்டிலே எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பாருங்கள். தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால் கருவறை வரை யார் வேண்டுமானாலும் செல்லலாம். அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகலாம். ஒட்டுமொத்த மக்களுக்கும் தங்கத் தலைவராக மு.க ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்'' என புகழ்ந்து பேசினார்.
ஆனால், உண்மையில் உத்திரப்பிரதேச மாநிலம், பிரக்யாராஜி நடைபெற்ற மகா கும்பமேளாவில் கடந்த மாதம் பத்தாம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று புனித நீராடினார். இந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய திமுக, எம்.பி. ஜெகத்ரட்சகன், ஜனாதிபதி கும்பமேளாவில் பங்கேற்கவில்லை எனக் கூறியதால் பார்வையாளர்கள் குழப்பம் அடைந்தனர். இவர் தெரிந்து தான் பேசுகிறாரா? ஒரு எம்.பி.,யாக இருந்து கொண்டு குடியரசுத் தலைவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எப்படித் தெரியாமல் போய்விட்டது?
முக்கியமான குற்றச்சாட்டை பொதுவெளியில் வைக்கும்போது ஒரு எம்.பியாக அதனை தெரிந்து கொண்டு ஆதாரப்பூவமாகத்தானே பேச வேண்டும். அதுவும் ஒரு ஜனாதிபதியை சாதியைச் சொல்லி ஒதுக்குகிறார்கள் என்கிற மாபெரும் குற்றச்சாட்டை வைக்கும்போது திமுக எம்.பி ஜெகத் ரட்சகன் இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளலாமா? பாஜகவை இகழ்ந்து, திமுகவை புகழ்வதற்காக இப்படி பாஜக மீது அபாண்டமாக பழி போடலாமா? திமுகவினர் பேசுவதெல்லாம் இப்படி உண்மைக்கு புறம்பானவைதானா? என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியர்களை பாதிக்குமா..! அதிபர் ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ திட்டம் என்றால் என்ன?