×
 

தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!

தேர்தல் நெருங்குவதால் பெரிய நாடகத்தை மக்களுக்கு முன்னால் திமுகவினர் நடத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அவர்கள் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு மக்களிடையே திமுக அரசு நாடகமாடுகிறது'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தேர்தல் நெருங்குவதால் பெரிய நாடகத்தை மக்களுக்கு முன்னால் திமுகவினர் நடத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அவர்கள் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இல்லம் தேடி கல்வியே அதற்குள்ளாகத்தான் இருக்கிறது. ஐயா சாவித்திரி கண்ணன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் எழுதியிருக்கிறார் பாருங்கள். ஒரு பத்திரிகையாளர் அவர் தெளிவாக எழுதி இருக்கிறார். ஜவகர்நேசன் என்கிற நம் ஐயா கல்வி கொள்கையை வகுக்குகிற குழுவில் அவர் இருந்தார்.

அவர் ஏன் அதில் இருந்து  வெளியேறினார் என்று கேட்டீர்களா? அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சொல்லிவிட்டு வெளியில் வந்து கொடுத்த பேட்டியில், ''புதிய கல்விக் கொள்கையை இந்த திமுக அரசு அப்படியே ஏற்றுக் கொண்டது.  அதன் பிறகு நாம் ஒரு கல்வித் திட்டத்தை நாம் வகுக்கிறோம் என்பது வேடிக்கையானது'' என்று வெளியேறி விட்டேன் என்கிறார். இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய கல்வியாளர்கள் எல்லாம் சொன்ன ஒரு பொது விஷயம் என்னவென்றால் இந்த கல்விக் கொள்கை நம் பிள்ளைகளுக்கு நாம் எழுதி வைக்கிற மரண சாசனம் என்கிறார்கள்.

இதையும் படிங்க: மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்வீங்களா.? மத்திய அரசை விளாசி தள்ளிய தமிழக அமைச்சர்..!

ஆகையால் இவர்கள் சும்மா நடிக்கிறார்கள். அதில் சமஸ்கிருதம் இருக்கிறது. இந்தியாவின் வரலாறு என்பதே வட இந்திய வரலாறு தான். அதில் என் வரலாறு வருமா? நான் ஒரு தேசிய இனத்தின் மகன். நான் ஒரு தெலுங்கு நானும் ஒரு தேசிய இனத்தின் மகன். நான் ஒரு மலையாளி. நானும் தேசிய இனத்தின் மகன். என் இனத்தின் வரலாறு வருமா? எங்கள் மூதாதையர்கள் போராடி தூக்கில் தொங்கி, வாலும், வேலும் ஏந்தி போரிட்டது. எங்கள் பாட்டன் மருதுபாண்டி, தீரன் சின்னமலை, பூலித்தேவன், சுந்தரலிங்கம், பெரும்பிடுகு முத்தரையர், எங்கள் பாட்டி வேலுநாச்சியார் போன்றோரின் வரலாறை அவர்கள் சொல்வார்களா? வராது.

அவர்கள் வல்லபாய் பட்டேலை தான் முன்னிறுத்துவார்கள். எங்கள் பாட்டன் வ.உ.சி விடுதலைக்காக செக்கிழுத்தவர். விடுதலைப் போராட்டத்திற்கும், வல்லபாய் பட்டேலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஆனால் எங்கள் பாட்டனுக்கு சம்பந்தம் இருக்கிறது. கப்பல் வாங்கி ஓட்டினார்... சுதேசி கப்பல் என்று வாங்கி ஓட்டினார். அன்றைக்கு நேர் நின்று இருந்தால் 50,000 அன்றைய தேதியில் சம்பளம். அதையும் விட்டு விட்டு வந்து சிறையில் கிடந்து வாடினார். செக்கை இழுத்தார் இந்த நாட்டின் விடுதலைக்கு... ஆனால் அவரை படிக்க முடியாது. காமராஜரை படிக்க முடியாது. முத்துராமலிங்க தேவரை படிக்க முடியாது.

 இந்த விடுதலைக்கு போராடிய எங்கள் முன்னோர்கள் மட்டுமல்ல, எங்கள் ஐயா நல்லகண்ணுவையை குறிக்க மாட்டார்கள். நாங்கள் அவ்வளவு தியாகங்களை செய்திருக்கிறோம். எங்களை பதிவு செய்ய மாட்டார்கள். பிறகு வரலாற்றில் மறைக்கப்பட்ட இனம் எப்படி எழுச்சிக் கொள்ளும்? எப்படி வாழும்? அதனால் தான் நாம் அந்த கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். தேர்தல் வரும் போது, நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது இந்தியை எதிர்த்து போராடினீர்கள். கோ பேக் மோடி என்றீர்கள். அப்புறம் ஆட்சிக்கு வந்தவுடன் வெல்கம் மோடி என்கிறீர்கள். இந்தி தெரியாது போடா என்றீர்கள். அப்புறம் இந்திக்காரனே வாடா என்கிறீர்கள். இப்போது தமிழகத்திற்கு இந்திக்காரர்கள் ஒன்றரை கோடி பேர் வந்திருக்கிறார்கள்.

அவன் இந்தியைத் தினித்தாலாதானே நீ எதிர்க்கிறாய். நான் இந்திக்காரனையே திணிக்கிறேன் என்கிறனர் திமுகவினர். அவன் என் உணவு விடுதியில் வேலை செய்கிறான். நான் அவனிடம் பேசுவதற்கு அவனோடு இந்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தி ஒழிப்பா..? எல்லா மக்களுடைய வாழ்விடங்கள், மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற விளைநிலங்கள் இவைகளை ஆக்கிரமித்து  அறிவு நகரம் கட்டுகிறார்களாம்.

இந்த நாட்டையே அறிவு நகரமாக, அறிவு நாடாக மாற்ற வேண்டும். அதுதான் ஒரு தலைவனின் கனவாக இருக்க வேண்டும். ஒரு நகரத்தை உருவாக்குகிறேன், ஒரு கிராமத்தை உருவாக்குகிறேன் என்றெல்லாம் பேசக்கூடாது. இந்த நாட்டை அறிவார்ந்த நாடாக மாற்ற வேண்டும். அதுதான் ஒரு தலைவருடைய கனவாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு.. ஒன்றுகூடிய திமுக கூட்டணி கட்சிகள்... மத்திய அரசுக்கு எதிராக அதிரடி முடிவு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share