‘அண்ணாமலையின் சாட்டையடி சிரிப்பா உங்களுக்கு தெரியுதா..?’கலாய்ப்பவர்களுக்கு பாஜக தொண்டர்களின் கசையடி..!
உங்களுக்கு ஒரு பிரச்னை வராதவரை மற்றவர்களின் பிரச்னை சிரிப்பாகத் தான் தெரியும்
கோவையில் உள்ள தனது வீட்டின் முன் திமுக ஆட்சியைக் கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து எதிர்க்ட்சியினர் கோமாளி அண்ணாமலை என கிண்டலடித்து வருகின்றனர்.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை நிகழ்வை இந்திய அளவில் கவனத்திற்கு கொண்டு செல்ல அண்ணாமலை மிக நேர்த்தியாக காய் நகர்த்துகிறார்.
பாஜகவினர் தேங்காய் நாரால் செய்யப்பட்ட சாட்டையைக் கொண்டு வந்திருந்தனர். அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டபோது அவரது கையை பிடித்துக்கொண்டு ‘‘எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அடித்துக் கொள்கிறோம்..’’ என பெண் தொண்டர்கள் கண்ணீர் மல்கக் கேட்டனர்.
இதையும் படிங்க: ‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!
‘இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்’ என்று, கோவை கோவை, நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ.க,வினர் ‘வெற்றி வேல், வீர வேல்’ என கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்க கூடிய கோபத்தை காட்டக் கூடிய போராட்டம் அல்ல.
கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்துது கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம். ஆனால் இன்னைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாட்களுக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம். எல்லா மேடைகளில் தி.மு.க., வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர்’’என அண்ணாமலை தெரிவித்தார்.
‘‘சாட்டையில் அடிப்பது தமிழ் மரபு. அது தினமும் நடக்கும் விஷயம்தான். என்னை வருத்திக் கொண்டேன் எனச் சொல்வதை விட, ஆண்டவனுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். நாங்களும் தவறுகள் செய்திருப்போம். அதற்கு இந்த சாட்டையடி ஒரு பாடமாக இருக்கட்டும். எல்லாப் பதவியும் வெங்காய பதவிதான்; வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒண்ணுமே இருக்காது.. அப்படித்தான் பதவியும்.. ’’ எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த சாட்டையடி சம்பவத்தை வைத்து கோமாளி அண்ணாமலை என எதிர்தரப்பினர் கிண்டலடித்து வருகின்றனர். அதிற்கு பதிலடி கொடுத்து வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘ஆண்மை உள்ள அண்ணாமலை, கற்பழித்தவனை கண்டிக்கிறார். ஆண்மை இல்லாதவன் அண்ணாமலையை கலாய்க்கிறான். அண்ணாமலையை இழிவுபடுத்தும் யாராயினும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்... உங்களுக்கு ஒரு பிரச்னை வராதவரை மற்றவர்களின் பிரச்னை சிரிப்பாகத் தான் தெரியும்’’என எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!