பழசை மறக்கலையே...எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்த திமுக அமைச்சர் ..!
கருத்துவேறுபாடு காரணமாக கட்சி மாறினாலும் நீங்காத நினைவோடு நினைவு நாளில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் சு.முத்துசாமி
கருத்துவேறுபாடு காரணமாக கட்சி மாறினாலும் நீங்காத நினைவோடு நினைவு நாளில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் சு.முத்துசாமி
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அம்பேத்கார், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.பெரியார் மற்றும் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைகளுக்கு அதிமுகவினர் மற்றும் திமுகவினர் என பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . திமுக சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு முத்துசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்துசாமி பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாலும் எம்ஜிஆரின் நினைவோடு அவரது சிலைக்கும் ஜெயலலிதா சிலைக்கும் வளர்த்துருவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் முத்துசாமியின் வீட்டு அருகே அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வந்த நிலையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சு முத்துசாமி அதிமுகவினரிடம் கட்சி பாகுபாடு இன்றி நலம் விசாரித்தார்...
இதையும் படிங்க: பதுங்கும் எடப்பாடி... ஒதுங்கும் பாஜக... ஜி.கே.வாசன் தலையை பதம் பார்க்க ரெடி... அண்ணாமலையின் அடடே அரசியல் கணக்கு
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..