×
 

போதை மாத்திரை, கஞ்சா விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தூக்கிய போலீஸ் - கூட்டாளிகள் 4 பேரும் கைது..!

3.5 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ரிச்சி தெருவில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சிந்தாத்திப்பேட்டை மற்றும் ரிச்சி தெரு, சியாலி அம்மன் கோயில் தெரு சந்திப்பில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று ரிச்சி மற்றும் சியாலி அம்மான் கோயில் தெரு சந்திப்பில் கண்காணித்தனர்.

இதையும் படிங்க: தடித்தனமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. டெல்லியை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.!

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் பையுடன் வந்த 2 பேர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது 3 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே 2 பேரிடமும் விசாரணை நடத்திய போது, சூளை கே.எம்.கார்டன் 6வது தெருவை சேர்ந்த சரத்குமார்(32) என்றும், செம்பியம் மணியம்மை நகரை சேர்ந்த சேரமான்(25) என தெரியவந்தது. இதில் சரத்குமார் மீது கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சேரமான் மீது கொலை முயற்சி, வழிப்பறி என 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சரத்குமார் மற்றம் சேரமான் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ஒட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெடிக்கல் ஷாப் நடத்திய வரும் மகேஷ்(35) மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக லாபத்திற்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த கொளத்தூர் அம்பேத்கர் நகர் 2வது ெதருவை சேர்ந்த முகமது சாதிக்(30) ஆகியோர் உதவியது தெரியவந்தது.

அதைதொடார்ந்து போலீசார் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மகேஷ் மற்றும் முகமது சாதிக் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 150 போதை மாத்திரைகள், கஞ்சா எடை போட பயன்படுத்தப்பட்ட எடை மெஷின், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் தமிழ்நாடு... என்று மடியும் திராவிட மாடல் மோகம்.? வேதனையில் பாஜக.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share