காரில் பெண்களை விரட்டிய சம்பவம்; முக்கிய புள்ளிகளைத் தட்டித்தூக்கிய போலீஸ்!
பெண்கள் பயணித்த காரை வழிமறித்து, கதவை தட்டி மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண்கள் பயணித்த காரை வழிமறித்து, கதவை தட்டி மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் காரில் பயணித்த பெண்களை மற்றொரு காரில் துரத்தியை எட்டு இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். சொகுசு காரில் குடும்பத்துடன் பயணித்த பெண்களை திமுக கொடி கட்டிய மற்றொரு காரில் இருந்த எட்டு இளைஞர்கள் தொடர்ந்து பின் சென்று துரத்திய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து திமுக கொடி என்பது குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கான லைசன்ஸா என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
5 பேர் கைது:
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரில் 5 நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. பெண்களை காரில் துரத்திய இளைஞர்கள் 8 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மீதமிருந்த நபர்களை தேடி வந்த நிலையில், கல்லூரி மாணவர்களான மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை கானாத்தூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..!
ஈசிஆரில் நடந்தது என்ன?
கடந்த 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் 4 பெண்கள், 2 ஆண்கள், ஒரு குழந்தை என 7 பேர் ஈசிஆர், முட்டுக்காடு பாலம் அருகே தனது குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தபோது , சபாரி காரிலும், கருப்பு நிற தார் காரிலும் வந்த இளைஞர்கள் தன்னை கேலி செய்யும் விதமாகவும், தன் காரை முன் சென்று குறுக்கே நிறுத்தி மிரட்டியதாகவும், தங்கள் காரை நிறுத்திய போது அந்த இளைஞர்கள் இறங்கி வந்து தங்களிடம் விவகாரம் செய்ததாகவும், பின்னர் தங்கள் காரின் பின்னால் வந்த வீடு வரை பின் தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாகவும் அந்தப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிசம்பர் 26ம் தேதி அன்று அளிக்கப்பட்ட புகாரியின் பேரில் வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம், வழிமறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சஃபாரி காரில் திமுக கொடி கட்டி இருந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்