×
 

புஸ்ஸி ஆனந்திற்கு குழி பறிப்பு... யார் அந்த கறுப்பு ஆடு?... ஈசிஆர் சரவணன் பரபரப்பு பேட்டி...! 

இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஒட்டப்பட்டுள்ள வரவேற்பு போஸ்டர் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 
இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஒட்டப்பட்டுள்ள வரவேற்பு போஸ்டர் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில்  தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் வருங்கால தமிழக முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே வருக வருக'' என விஜய் புஸ்ஸி ஆனந்த் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் தயார் செய்து ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே புஸ்ஸி ஆனன்ந்த் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த் தவெக  கட்சியினரை நாய் மாதிரி நடத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ''தலைவர் விஜயைச் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்த்-ஐ 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய். ஆனால் விஜய்-க்கு பொதுச்செயலாளர் ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர்ல வந்தாலும் பதவி கிடையாது! நான் தளபதி ரசிகன்... மார்த்தட்டும் புஸ்ஸி ஆனந்த்

இருக்கிற பிரச்சனைகளுக்கு இடையே இப்படி போஸ்டர் வேறு ஒட்டி தன்னை யாரோ முதுகில் குத்துவதாக புஸ்ஸி ஆனந்த் டென்ஷன் ஆகியுள்ளார். இதனிடையே இப்படியொரு போஸ்டரை தான் ஒட்டவே இல்லை என ஈசிஆர் சரவணன் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “தற்போது தான் அந்த போஸ்டரை நான் பார்த்தேன். எனக்கும் அந்த போஸ்டருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மறைமலை நகரில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த மாதிரி கீழ்தரனமா நாங்க பண்ணவே மாட்டோம். எங்களுக்கு தெரிஞ்சல்லாம் தளபதி அவர்கள் மட்டும்தான். 30 வருஷங்களாக அவருடன் பணித்து வருகிறேன். என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் எனக்கூறினார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “செங்கல்பட்டு மாவட்டத்துல மறைமலர் நகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதை ராதா டிசைன் என்ற இடத்தில் பண்ணிருக்காங்க. அந்த டிசைன் ஆபீஸுக்கு ஆட்களை அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கேன். யார் அந்த போஸ்டரை டிசைன் செய்ய சொன்னார்கள் என கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்” என்றார்.  

இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழுவுக்கு தயாராகும் கமகம விருந்து.. என்ன ஸ்பெஷல்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share