டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்... செந்தில் பாலாஜிக்கு புது தலைவலி!!
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறை பகீர் கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், விற்பனை மையங்களில் சோதனைகள் நடைபெற்றன. மொத்தமாக 7 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே நடைபெற்ற சோதனைகளில் ஏராளமான ஆவணங்களும், பெருமளவு ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி?... டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு மேல் முறையீடு... ED வெளியிட்ட பகீர் தகவல்...!
உரிய ஆணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு ஊழலில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் ஆதாரங்கள் சிக்கியுள்ளது என்றும், பார் உரிம டெண்டர்கள் தொடர்பான விவரங்களில் விண்ணப்பதாரர்களுக்கு தரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. மோசடி வழக்கில் கைதான செந்தில் பாலாஜி கைதாகி சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்திருந்தார்.
இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமலாக்கத்துறை ரெய்டு, ஊழல் அறிக்கை செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கலை கொடுத்துள்ளது. இதற்கிடையே மதுபான ஊழலை குறிப்பிட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அமளில் ஈடுபட்டதால் இது புது பிரச்சனையாக வெடிக்க தொடங்கியுள்ளது .
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழலா..? அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன..?