×
 

குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு நாடுகள் உறவுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் குறித்து பேசப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டை சந்தித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். புதிதாக பதவியேற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்பின், வெள்ளை மாளிகையில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார்.

அதன்பின், வாஷிங்டனில் உள்ள பிளேயர் ஹவுஸில் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியை எலான் மஸ்க் மற்றும் அவரின் தோழி ஷிவான் ஜில்ஸ், குழந்தைகள் வரவேற்றனர். இந்தச் சந்திப்புக்குப்பின் எலான் மஸ்க்கின் குழந்தைகளுக்கு நோபல் பரிசு பெற்ற இந்தியகவிஞர் ரவீந்திரநாத் தூகாரின் “ தி கிரெசன்ட் மூன்” என்ற நூலையும், ஆர்கே நாராயண் கதைகள் மற்றும் பண்டிட் விஷ்னு சர்மாவின் பஞ்சதந்திர கதைகள் கொண்ட நூலையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்கிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி உறுதி

எலான் மஸ்க்கின் மனைவி ஷிவான் ஜில்ஸ், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். எலான் மஸ்க், ஷிவா ஜில்ஸ் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்றபோதிலும் முதல் பிரசவத்தில் இருவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தன, 3வது குழந்தைக்காக தற்போது ஜிலிஸ் கர்ப்பமாக இருக்கிறார்.

எலான் மஸ்க் குடும்பம் பெரிய குடும்பம். எலான் மஸ்கிற்கு 12 குழந்தைகள் உள்ளன. முதல் மனைவி ஜஸ்டின் மஸ்கிற்கு பிறந்த முதல் குழந்தை இறந்துவிட்டார். முதல்மனைவிக்கு 5 குழந்தைகளும் உள்ளன. இவரை விவாகரத்து செய்த எலான் மஸ்க், இசைக்கலைஞர் கிரிம்ஸ் என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. 3வதாக தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவா ஜில்ஸ் என்பவருடன் திருமணமாகாமல் வாழ்ந்துவரும் எலான் மஸ்கிற்கு 2 குழந்தைகளும் உள்ளன. 

எலான் மஸ்குடன் நடந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக மட்டும் எலான் மஸ்க் இல்லை, அதோடு அமெரிக்க அரசின்  திறன்மிகு துறையின் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ எலான் மஸ்குடன் நடந்த சந்திப்பு சிறப்பாக, இனிமையாக இருந்தது. அவரின் 3 குழந்தைகளையும் சந்தித்துத் பேசினேன். விண்வெளி, தொழில்நுட்பம், புத்தாக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் கலந்து பேசினோம். குறைவான அரசு தலையீடு, அதிகமான நிர்வாகம் என்ற இந்தியாவின் கொள்கைகள் குறித்து எலான் மஸ்கிடம் பேசினேன்” எனத் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி சந்தித்தபோது உடன் இருந்தனர். மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி, எலான் மஸ்க் இருவரும் இரு நாடுகளும் புத்தாக்கம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, நிலையான மேம்பாடு ஆகியவற்றில் கூட்டுறவோடு செயல்பட்டு, வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை ஆழமாக எடுத்துச் செல்ல இருவரும் ஆலோசித்தனர்.” எனத் தெரிவித்துள்ளது.விரைவில் எலன் மஸ்க் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இந்தியாவில் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றதாம்

இதையும் படிங்க: MAGA+MIGA=MEGA என்றால் என்ன? பிரதமர் மோடியின் புதிய கோட்பாடு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share