கனடாவில் 400 கிலோ தங்கம் ரூ.137 கோடி கொள்ளை… இந்தியாவுக்கு தப்பிய சிம்ரன் வீட்டில் ED சோதனை..!
கனடாவிலிருந்து 400 கிலோ தங்கம், கோடிக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்துடன் தப்பிச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொஹாலியில் உள்ள 32 வயதான சிம்ரன் ப்ரீத் பனேசரின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. கனடா வரலாற்றில் மிகப்பெரிய திருட்டின் மூளையாக பனேசர் உள்ளார். மிகப்பெரிய தங்கக் கொள்ளையில் தொடர்புடைய 9 சந்தேக நபர்களில் இவரும் ஒருவர். கனடாவிலிருந்து 400 கிலோ தங்கம், கோடிக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்துடன் தப்பிச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
மொஹாலியின் செக்டார் 79 -ல் உள்ள பனேசரின் வீட்டில் காலை 7 மணியளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். ஒன்பது மணி நேர சோதனைக்குப் பிறகு, பனேசர்- அவரது மனைவி பிரீத்தி ஆகியோர் சண்டிகர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். தற்போது, இருவரிடமும் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கனடா வரலாற்றில் மிகப்பெரிய தங்கத் திருட்டுகளில் ஒன்றான இந்த கொள்ளையில் பனேசர் ஒரு தப்பியோடிய குற்றவாளி.
இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 10 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்வி
''நாங்கள் வீட்டை சோதனை செய்து மின்னணு சாதனங்கள், ஆவணங்களை கைப்பற்றினோம். அவை பகுப்பாய்வு, மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது'' என அமலாக்கத்துறை மூத்தD அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹோஷியார்பூரில் உள்ள பனேசரின் மாமனாருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களும் சோதனை செய்யப்பட்டன.
கனடாவின் வரலாற்றில், இவ்வளவு பெரிய தங்கத் திருட்டு ஏப்ரல் 2023-ல் நடந்தது. டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை நடந்தது. விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இருந்து 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் $2.5 மில்லியன் (ரூ.137 கோடி) மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருடப்பட்டன. திருட்டு நடந்த நேரத்தில், பனேசர் ஏர் கனடாவின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் துறையில் செயல் கண்காணிப்பாளராக இருந்தார்.
இந்த சம்பவம் சூரிச்சிலிருந்து வந்த விமானத்திலிருந்து பொருட்களை இறக்கும் போது கொள்ளை நடந்தது. சிம்ரன் ப்ரீத் பனேசர் அப்போது கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வந்தார். கொள்ளைக்குப் பிறகு, அவர் கனடாவை விட்டு தப்பியோடி இந்தியா வந்தார்.
திருட்டுக்குப் பிறகு, சிசிடிவி, தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததாக கனடாவில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை ஏற்றிச் சென்ற விமானம் எது வரவிருக்கிறது என்பதைக் கண்டறிய பனேசர் அமைப்பைத் தேடிக் கொண்டிருந்தார். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன. விமானம் தரையிறங்கிய பிறகு, தங்கம் இருந்த கொள்கலனை அவர் கண்காணிக்கத் தொடங்கினார். அவர் சரக்கு அமைப்பையும் கையாண்டார். அவரது நண்பர்களுடனான 772 அழைப்புகளும் கண்காணிக்கப்பட்டன.
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. தலைகீழாக தொங்கிய பயணிகள்.. நிவாரணம் அறிவித்த விமான நிறுவனம்..!