சோதனை மேல் சோதனை... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த இரண்டு மாஜிக்கள்... காரணம் என்ன?
எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையில் இந்த விழாவிற்கு செங்கோட்டையனும் தங்கமணியும் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையில் இந்த விழாவிற்கு செங்கோட்டையனும் தங்கமணியும் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. முக்கியமாக ஜெயலலிதாவினுடைய சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட அதிமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி இரண்டு பேரும் இந்த நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக இருவரும் அவரவர் சொந்த ஊர்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் கே.வி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயகுமார் இப்படி பலரும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையல் செங்கோட்டையனும் தங்கமணியும் திட்டமிட்டு நிகழ்ச்சியை தவிர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் வந்து கோபிசெட்டிபாளையத்திலும் அதேபோல தங்கமணி அவருடைய சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாக்களில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் இதை நடத்திக்காட்டாமல் விடமாட்டேன்…' செங்கோட்டையன் அதிரடி..!
அதிமுக தலைமை மீது செங்கோட்டையனுக்கு ஏற்கனவே அதிருப்தி இருப்பதாக வந்து சொல்லப்படுகிறது. அந்த வகையில கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட அத்திக்கடவு அவிநாசி கூட்டமைப்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவானது கோவையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்து இருந்தார்.
முக்கியமாக ஜெயலலிதா அதேபோல எம்ஜிஆரின் உடைய புகைப்படங்கள் இடம்பெறாததால் தான் நான் அதை புறக்கணித்தேன் என்ற விளக்கமும் கூட கொடுத்திருந்தார். அதற்குப் பிறகாக அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் தொடர்ந்து கலந்து கொள்ளாமல் இருந்தார். குறிப்பாக டெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்ற பல ஆண்டுகளாக கனவு சமீபத்தில் நிறைவேறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவேறியது அந்த வகையில டெல்லியில அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியானது காணொளி வாயிலாக ராயப்பேட்டையில் இருந்து நடைபெற்றது. அன்றைய தினம் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அந்த நிகழ்ச்சியானது நடந்திருந்தது. அந்த நிகழ்வையும் செங்கோட்டையன் தவிர்த்திருந்தார்.
அதன் பின்னர் பல்வேறு அணிகளின் உடைய மீட்டிங்கும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்து சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்டிருந்த நிலையில செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வந்திருந்தார். இருப்பினும் இன்றைய தினம் ஜெயலலிதாவினுடைய பிறந்த நாளில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டுமே செங்கோட்டையன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கக்கூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது வழக்கமானது.
இந்தமுறை பிரச்சனைகள் இருந்தாலும், அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என அதிமுக தலைமை முதற்கொண்டு தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த முறை செங்கோட்டையனுடன் சேர்ந்து தங்கமணியும் நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன், தங்கமணி இருவரது பெயரும் இடம் பெறாத நிலையில், தற்போது தங்கமணி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆடு, ஓநாய் குறித்து இபிஎஸ்-யிடம் கேளுங்கள்... செங்கோட்டையன் பாய்ச்சல்...!