லீவ் லெட்டர் எழுதும் ஆளுநர்..ஓடஓட விரட்டப்படுவீர்கள்..CM பொறுமைக்கு எல்லையுண்டு ..கர்ஜித்த கனிமொழி எம் .பி
தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள்,நீங்கள் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை என ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று குற்றம்சாட்டி அவரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி. ஆளுநர் வீட்டிலிருந்து லீவ் லெட்டர் அனுப்பினால் முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார். எதிரிகளை பிறமுதுகிட்டு ஓட வைக்கக்கூடிய இயக்கம் திமுக. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான் முதலில் பாடப்படும், இதுதான் எங்களுடைய சட்டம்.
நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு ஓடி வந்தவர்கள், உங்களுக்கும் சுதந்திர போராட்டத்திற்கு என்ன சம்பந்தம் தேசிய கீதத்தை காப்பாற்ற உங்களை விட முதலமைச்சருக்ககு தெரியும். நீங்கள் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை. நீங்கள் அவமானப்படுத்திக்கொண்டே இருந்தால் நாங்கள் அமைதியாகவே இருப்போம் என நினைக்காதீர்கள், கடைசியில் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத நிலை வரும் என்பதால் தான் ஆளுநரை திரும்ப பெற கூறுகிறோம் என்று எச்சரித்தார்.
மக்களின் சுயமரியாதைக்காக போராடக்கூடிய இயக்கம் திமுக, உங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம், திராவிடம் என்று சொன்னாலே தூக்கத்தில் வரும் கனவில் கூட அவர்களுக்கு பயம். மூன்றாவது முறை ஆளுநர் வெளியேறியிருக்கிறார், இந்த மாநிலத்தில் மட்டும் ஏன் இதே ஆளுநரை வைத்துள்ளீர்கள்?. தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுவிரைவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்...