×
 

மனைவியின் காதலனை போட்டு தள்ளிய கணவன்..! கருமத்தம்பட்டியில் பகுதியில் பரபரப்பு

தனது அன்பு மனைவியின் காதலனை கணவன் திட்டமிட்டு போட்டுத் தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனது அன்பு மனைவியின் காதலனை கணவன் திட்டமிட்டு போட்டுத் தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேலுக்கு 56 வயதாகிறது இவருக்கு சுமத்ரா என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள் சுமத்ரா கோவையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
 தனது குடும்பத்தோடு நகரின் புறநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி வந்த முருகவேல் தனது மனைவி சுமத்ராவின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. முருகவேலின் மனைவி சுமத்ராவுக்கும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் இடையே முறை தவறிய உறவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது முனியாண்டியோ ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆவார் நாளடைவில் சுமத்ரா முனியாண்டியின் நெருக்கம் அதிகமாகி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

ஒரு கட்டத்தில் தனது மனைவி சுமத்ராவை கண்டுபிடித்து கொடுக்கும்படி முருகவேல் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் பின்னர் அவர்கள் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து சுமத்ராவை முருகவேலுடன் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். கரூரிலிருந்து பிரச்சனை என நினைத்த முருகவேல் தனது வீட்டை திருப்பூருக்கு மாற்றி அங்கு பனியன் கம்பெனியில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர்.
.ஆனாலும் கரூர் காண்டாக்ட் விடாமல் பிடித்துக் கொண்ட முனியாண்டி தொடர்ந்து அங்கும் வந்து சுமத்ராவுடன் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளார்.
 இதேபோன்று ஒரு நாள் முருகவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் முனியாண்டி சுமத்ராவின் வீட்டுக்கே வந்து தங்கி உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக முருகவேல் சென்ற வேலை முடிந்து  வீட்டிற்கு திரும்பி வந்த போது இருவரும் அறைக்குள் இருந்ததை கண்டுபிடித்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இதையும் படிங்க: சையப் அலிகானை கத்தியால் குத்தியது நான்தான்... குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது இஸ்லாம்....


உடனே ஓடிச்சென்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து முனியாண்டியின் மார்பில் குத்தியுள்ளார் கத்திக்குத்துப்பட்ட முனியாண்டி வலியால் துடித்து வீட்டு வாசல் வரை ஓடி வந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் முனியாண்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் கொலை செய்த முருகவேல் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தனது மனைவியை முனியாண்டியின் நெருக்கத்திலிருந்து காப்பாற்ற பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் முனியாண்டியை கொலை செய்ததாக முருகவேல் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தப்பவில்லை! பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை இழந்தார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share