×
 

வேறு நாடாக இருந்தால் மோகன் பாகவத் சிறையில் இருந்திருப்பார்.. ராகுல் காந்தி ஆக்ரோஷம்!

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினால், அது தேசத் துரோகம். வேறு எந்த நாட்டிலும் இப்படி பேசியவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்று மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம்  இந்திரா பவனை முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். விழாவில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். “ஒரு முக்கியமான தருணத்தில் நாம் புதிய தலைமையகத்தைத் திறந்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, 1947இல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன்தான் நமது அரசியலமைப்பு. ஆனால், மோகன் பாகவத் அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பாஜக,  ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நம் நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். மகாராஷ்டிரா தேர்தலில்  ஏதோ தவறு நடந்துள்ளது என்று தெளிவாக சொன்னேன். ஆனால், தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் சங்கடமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் சுமார் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் திடீரெனத் தோன்றுவது சிக்கலானது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் கூடிய வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால்,  தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

வாக்காளர் பட்டியலை வெளிப்படையானதாக மாற்ற தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது? பட்டியலை எங்களுக்கு வழங்காமல் இருப்பதன் நோக்கம் என்ன? அதை ஏன் அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்?  நமது தேர்தல் முறையில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் நமது நாட்டின் அரசியலமைப்புக்கு சேவை செய்தவர்கள். மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள். இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை.

இதையும் படிங்க: ‘அர்பன் நக்சல்கள், டீப் ஸ்டேட் அமைப்புகளுடன் ராகுலுக்கு தொடர்பு... இந்தியாவை சீரழிக்கும் காங்கிரஸ்...’:பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சுதந்திரப் போராட்டம் பற்றியும் தேசத் துரோகம் பற்றியும்  மோகன் பாகவத் என்ன நினைக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது.  அவர் கூறியது தேசத்துரோகம். அரசியலமைப்புச் சட்டம் மதிப்பற்றது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்றும் அவர் கூறினால், அது தேசத் துரோகம். வேறு எந்த நாட்டிலும் இப்படி பேசியவர் கைது செய்யப்பட்டிருப்பார். 1947இல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வோர்  இந்தியரையும் அவமதிப்பதாகும். இந்த  முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது" என்று ராகுல் காந்தி பேசினார்.

 

இதையும் படிங்க: ‘மோகன் பாகவத் பேச்சு முட்டாள்தனம், வெளியேறவிடமாட்டோம்’: ஆர்எஸ்எஸ் தலைவருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share