×
 

இந்தியாவுக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் தேவை... ராகுல் காந்தியை பொளக்கும் பாஜக!

இந்தியாவுக்கு விசுவாசமான, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் தேவை என்று ராகுல் காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகள் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடி வருகின்றன" என்று தெரிவித்திருந்தார். ராகுலின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.

சமூக வலைதள பதிவில்  ஜே.பி.நட்டா, “பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவித்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு.  அக்கட்சியின் அதிகார பேராசை, நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்துகொண்டது, மக்களின் முதுகில் குத்தியது என ஏராளம். ஆனால், இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். ராகுல் காந்தியையும் அவருடைய அழுகிப்போம சித்தாந்தத்தையும் எப்போதும் நிராகரிக்க முடிவு செய்துவிட்டனர்” என்று நட்டா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டள்ள சமூக வலைதள பதிவில், "அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற காங்கிரஸ் கட்சி, இப்போது, ​​"நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்" என்று கூறுகிறது. எனில், ராகுல் காந்தி எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்?" என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்; ஏன் தெரியுமா.? பின்னணி இதுதான்!

பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "ராகுல் காந்தியின் கருத்து ஒவ்வொரு இந்திய குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இந்திய‌ எதிர்க்கட்சித் தலைவர். இந்திய எதிர்க்கட்சித் தலைவரான அவர், இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறோம். இந்தியாவுக்கு விசுவாசமான, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் தேவை." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முழங்காலில் நடந்த நிதிஷ் குமார் ரெட்டி! திருப்பதி மலைப்படிகளில் ஏறி நேர்த்திக்கடன்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share