ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்திருப்பது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பீகார் அரசின் பட்ஜெட்டா என்று காங்கிரஸ் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாகத் தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய பட்ஜெட்டை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். அதில், "குண்டு காயங்களுக்கு பேண்டெய்டு போடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால், இந்த அரசு அந்த விஷயத்தில் திவாலாகி விட்டது" என ராகுல் தெரிவித்துள்ளார்.
இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரியும் பதிவிட்டுள்ளார். அதில், "இது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பீகார் அரசின் பட்ஜெட்டா என்கிற கேள்விதான் எழுகிறது. நிதி அமைச்சரின் உரையில் பிஹார் தவிர வேறு எந்த மாநிலத்தின் பெயரும் உச்சரிக்கப்பட்டதைப் போலத் தெரியவில்லை. மத்திய பட்ஜெட் என்பது முழு நாட்டுக்கும் ஆனது. பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களுக்கும் ஏதாவது இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் மிகவும் துரதிருஷ்டவசமானது. கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருக்க பாஜக முழு நாட்டையும் பணயம் வைத்துள்ளது" என மணீஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?
பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய், "கடந்த 10 ஆண்டுகளாக நாம் கேட்டு வரும் அதே பழைய பட்ஜெட்தான் இது. ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. வரி திட்டங்கள் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். வரி மாற்றங்கள் முன்பும் செய்யப்பட்டன, ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான பட்ஜெட்டாகும்" என கோகாய் கூறினார்.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு பெஸ்ட்....!! மற்றதெல்லாம் வேஸ்ட்..! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி