×
 

அது எடப்பாடியாரின் கடிதமா..? பாலியல் ரீதியாக அட்டாக் செய்யப்படும் காயத்ரி ரகுராம்..! விடாமல் துரத்தும் பாஜக வார் ரூம்..!

உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு  நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும், நான் அதை தலைகீழாக செய்வேன்

திரைத்துறை பிரபலமான காயத்ரி ரகுராம் முன்னதாக பாஜகவில் இருந்தார். கட்சி நடவடிக்கை பாய்ந்ததை அடுத்து பாஜகவில் இருந்து விலகி அவர் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காய்த்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக மற்றும் திமுக நிர்வாகிகளை விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த  7 நாட்களுக்கு முன், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பின்னால் தள்ளப்பட்ட காயத்ரி ரகுராம், கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து மேடையில் இருந்து வேக வேகமாக இறங்கி வெளியேறினார். மேடையில் தனக்கு சரியான இடம் கிடைக்காததால் காயத்ரி ரகுராம் மேடையில் இருந்து இறங்கியதாக கூறப்பட்டது. ஆனால் மேடையில் மகளிர் அணி நிர்வாகிகள் பயன்படுத்திய வார்த்தைகள் தனக்கு பிடிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறியதாக காயத்ரி ரகுராம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலை அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு கடிதம் உலா வருகிறது. அந்தக் கடிதத்தில், ''அவப் பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்க, கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி காயத்திரி ரகுராம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்'' என எடப்பாடியார் அறிவித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: குடும்ப ஆட்சியை விரட்ட காத்திருக்கும் மக்கள்.. விரைவில் அதிமுக ஆட்சி.. கடிதம் எழுதிய ஈபிஎஸ்!

காயத்ரி ரகுராம் எக்ஸ் தளப்பதிவு

இந்தக்கடிதத்தை பரப்பி வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை டேக் செய்து, ''பாலியல் தொழில் ஈடுபட்டது உண்மையா? நீக்கம் காரணம் என்ன? ஆபாச நடிகை காயத்திரி ரகுராம்... கட்சியில் போதிய அளவு வரவேற்பு இல்லாத காரணத்தால் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதை அறிந்த எடப்பாடி அவரை கட்சியில் இருந்து நீக்கினாரா ..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இதனால், கடுப்பான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளப்பதிவில், ''மக்களிடம் உண்மையை சொல்.என்னாடா 420மலை. நீ வார்ரூமிடம் அழச் செய்தாய். அய்யா எடப்பாடியார் கடிதத் தலைப்பை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்காக அவர்கள் ஆபாசம் குற்றம் செய்ய தொடங்கினர். இது உங்கள் ஆலோசனையுடன், வழிகாட்டுதலின் படியா? இது குற்றம் என்று அவர்களுக்குத் தெரியாதா? உன் வீரம் என்னை நோக்கி மட்டுமே, திமுகவுடன் இல்லை.புல் தடுக்கி பயில்வான் செயல்.என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீ விரும்புகிறீர்கள். அது நடக்காது. உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு  நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும், நான் அதை தலைகீழாக செய்வேன், பார்த்து டா கோமாளி. நான் ஜோக்கர்களுக்கு பயப்படவில்லை என்று சொல்லுங்கள். உங்கள் சில்லறை யோசனையால் எந்த பயனும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

நாம் விசாரித்தபோது, '' உண்மையில், காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அந்த நீக்குதல் கடிதம் போலியானது. அது பாஜக வார் ரூமின் மூலம் பரப்பப்படும் போலியான கடிதம்னால் தான் எக்ஸ்தளப்பதிவில் காயத்ரி ரகுராம் பொங்கியுள்ளார்'' என்கின்றனர்.

இதையும் படிங்க: “இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share