×
 

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்.. வங்கி கடன் மோசடியிலும் சிபிஐ வழக்குப்பதிவில் நீதிபதி பெயர்..!

2018ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவிலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்வந்த் வர்மா வீட்டில் கத்தைகத்தையாக பணம் கைப்பற்றிய செய்தியின் சூடு குறைவதற்குள், 2018ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவிலும் நீதிபதியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சிம்பாலி சர்க்கரை ஆலை வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சர்க்கரை ஆலை இயக்குநர்கள், யஸ்வந்த் வர்மா உள்ளிட்டோரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறது. அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகமில்லாத இயக்குநராக யஸ்வந்த் வர்மா இருந்துள்ளார்.

ஒரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கி சர்க்கரை ஆலைக்கு கடன் வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக சிபிஐயிடம் புகார் அளித்தபின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே, ஹபூர் நகர ஓரியன்டல் வங்கி கிளை 5,762 விவசாயிகள் உரங்கள், விதைகள் கொள்முதல் செய்ய ரூ.148.59 கோடி வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 3வது நபருக்கு பணம் மாற்றப்பட்டு அவர் வழியாக விவசாயிகளின் தனிநபர் சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். சிம்பாலி சர்க்கரை ஆலை சார்பில் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் தாங்கள் கடனை செலுத்தவதாக உறுதியளித்திருந்தது.

இதையும் படிங்க: நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாய் பணம்.. தீ விபத்தால் வெளிவந்த உண்மை.. கணக்கில் வராத பணத்தால் கஷ்டத்தில் நீதிபதி..!

அப்போது அந்த சர்க்கரை ஆலை போலியான கேஒய்சி ஆவணங்களைத் தாக்கல் செய்து, நிதியைப் பெற்றது. 2015 மார்ச் மாதம் ஓரியன்டல் வங்கி, இந்த வங்கிக்கடன் மோசடியாக பெறப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த கடனில் ரூ.97.85 கோடி இழப்பு ஏற்பட்டு, 109.08 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.

இதையடுத்து, ஓரியன்டல் வங்கி வங்கிமோசடி குறித்து சிபிஐ அமைப்பிடம் புகார் அளிக்கவே, இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதில் டெல்லி நீதிபதியாக இருக்கும் யஸ்வந்த் வர்மா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மருமகன் குர்பால் சிங் பெயரும் இடம் பெற்றது. சிபிஐ முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தபின், அதை அடிப்படையாக வைத்து அமலாக்கப்பிரிவும் வழக்கு விசாரணை நடத்தியது.

2023ம் ஆண்டு டிசம்பரில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிற்பித்த உத்தரவில் “ 7 வங்கிகளில் நடந்துள்ள கடன் மோசடியில் புதிதாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், நீதித்துறையின் மனசாட்சியை உலுக்குகிறது இந்த மோசடி என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

சிம்பாலி சர்க்கரை ஆலைக்கு ரூ.900 கோடி கடன் வழங்கியதில் பல்வேறு வங்கி அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்துள்ளதை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்தது. நீதிமன்றம் குறிப்பிடுகையில் “ கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி வழிகாட்டி நெறிமுறைகள் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி எந்தஅதிகாரி கடனை வழங்கினார், வாரிய உறுப்பினர்கள் யாரெல்லாம் கடனை பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்தனர் ஆகியவை விசாரிக்கப் பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டு பிப்ரவரில் சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. 

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஸ்வந்த் சர்மா. ஹோலி பண்டியையன்று நீதிபதி வர்மா குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த போலீஸார், தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அப்போது ஓர் அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை போலீஸார் கண்டறிந்து, அதை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. எங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டாரோ அங்கேயே செல்ல நீதிபதிகள் குழுவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் பில் கேட்ஸ் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share