×
 

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

கர்நாடகாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்தே கொலை செய்த கணவன், தனது மனைவி கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடமாடிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

மதுபோதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது. போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எளிதில் ஒரு விஷயத்தை கடக்க முடியாமல் மன உளைச்சலில் சிக்கி தவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல் குடிபோதைக்கு அடிமையானவர்கள் இடையே குடும்ப உறவுகள் சரிவர இருப்பது இல்லை என்றும், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் குறைந்து போவதாகவும் ஆய்வுகள் வழியாக நமக்கு தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக குடிபோதைக்கு அடிமையானவர் மத்தியில் சந்தேக நோய் தோன்றி திருமண உறவை சிதைப்பதையும், அதனால் அவர்கள் கொலை செய்ய துணிவதையும் செய்திகள் வழியே அறிகிறோம். இதேபோல் கர்நாடகாவில் 50 வயதான ஒருவர் தனது 42 வயதான மனைவி நடந்த்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, தொட்டபள்ளாப்புரா அருகே உள்ள நெரலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணா.  அவருக்கு வயது 50 . இவரது மனைவி ராதாம்மா. அவருக்கு வயது 42. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். சமீபத்தில் மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். ராதாம்மா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். லட்சுமணா கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இந்நிலையில் லட்சுமணாவுக்கு அடிக்கடி மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. குடிக்கு அடிமையான லட்சுமணா தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ராதாம்மாவுடன் சண்டை போட்டு வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினமும் குடிபோதையில் ராதாம்மாவுடன், லட்சுமணா தகராறு செய்துள்ளார். 

இதையும் படிங்க: பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை.. கடவுளை வம்புக்கிழுத்த துணை முதல்வர் சிவகுமார்..!

மறுநாள் காலை, ராதாம்மா வீட்டில் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினரை அழைத்த லட்சுமணா, தனது மனைவி வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்களை மட்டும் அழைத்து அவசரம் அவசரமாக இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலர், தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு  தகவல் அளித்தனர். லட்சுமணாவே அவரது மனைவியை கொலை செய்திருக்கலாம் என புகார் கூறீனார். இதனடிப்படையில் சம்பட இடத்திற்கு வந்த போலீசார், இறுதிசடங்கை நிறுத்திவைத்துவிட்டு, லட்சுமணாவை அழைத்து விசாரித்துள்ளனர்.

முதலில் தனது மனைவி கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடினார் லட்சுமணா. ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பின்பு தனது தவறை ஒப்ப்புகொண்டார். நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தான் தினமும் குடித்துவிட்டு சண்டைபோடுவதாக மனைவி தெரிவித்த நிலையில் மோதல் முற்றியதாகவும், தனது மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பானதாவும் லட்சுமணா தெரிவித்தார். அப்போது தனது மனைவின் தலையை சுவரில் முட்டி கொலை செய்ததை லட்சுமணா ஒப்புக் கொண்டார். 

எனினும் போலீஸ் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொலையை மறைக்க முயற்சி செய்ததாகவும், இறுதியில் மாட்டிக்கொண்டதாகவும் போலீசாரிடம் லட்சுமணா தெரிவித்துள்ளார்.  தனியார் ஆஸ்பத்திரியில் ராதாம்மா நர்சாக இருந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டும், குடிபோதையிலும் லட்சுமணா அவரை கொன்றது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் முதல் மகன் இறந்த பிறகு ராதாம்மாவும் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் லட்சுமணாவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதையும் படிங்க: திருடன், போலீஸ் விளையாட்டால் விபரீதம்.. பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறுவன் மரணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share