ஒரு வருடத்திற்கு பிறகு சட்டப்பேரவைக்கு வந்த KCR..! வழக்கால் பயந்து வழிக்கு வந்த சுவாரஸ்யம்..!
ஒரு வருடத்திற்கு பிறகு சட்டப்பேரவை அமர்வில் கலந்துகொண்டார் தெலங்கானா எதிர்க்கட்சி தலைவர் கே.சந்திரசேகர் ராவ்.
ஒரு வருடத்திற்கு மேல் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த பாரத ராஷ்டிர சமிதி (BRS) தலைவரும், தெலங்கானா எதிர்க்கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் (கேசிஆர்), இன்று சட்டப்பேரவை அமர்வில் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் அவரது சம்பளத்தை நிறுத்த சபாநாயகரிடம் வலியுறுத்தியதும், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டதும் அவரை வழிக்கு கொண்டு வர செய்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவின் உரையின்போது அவர் பங்கேற்றார். நவம்பர் 2023-ல் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த பின், கேசிஆர் அரிதாகவே சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: பணக்கஷ்டத்தால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு; பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த கொடூரம்...!
தற்போது BRS எம்எல்ஏக்களின் உற்சாக வரவேற்புடன் அவர் பேரவைக்கு வந்து, கூட்டம் நடத்தினார். செவ்வாய்க்கிழமை தெலங்கான பவனில் நடந்த BRS சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் அரசு நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பவும் மக்களிடையே கொண்டு செல்லவும் அவர் வலியுறுத்தினார்.
15 மாதங்கள் ஆட்சி அவர்களிடம் கொடுத்தோம், ஆனால் சரியான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது என கே.சி.ஆர் காட்டமாக விமர்சனம் செய்தார்.
ஆனால், அவரது மகன் கே.டி. ராமராவ், கேசிஆரின் அந்தஸ்துக்கு சட்ட பேரவை பொருத்தமில்லை ஆனால் காங்கிரஸ் எங்களை ஏமாற்றுகிறது, எனவே வரும் வியாழக்கிழமை முதல் அவர் மீண்டும் சட்டப்பேரவைக்கு வரமாட்டார் என தெரிவித்தார்.
முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேசிஆரின் புறக்கணிப்பை கடுமையாக விமர்சனம் செய்தனர். செவ்வாய்க்கிழமை அன்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தாரிபள்ளி ராஜசேகர் ரெட்டி மற்றும் பிறர் சபாநாயகரிடம் கேசிஆரின் சம்பளத்தை நிறுத்த கோரிக்கை வைத்தனர்.
அதேநேரம், விவசாய சங்கங்களின் பொதுச் செயலாளர் டி. விஜய்பால் ரெட்டி தாக்கல் செய்த PIL, கேசிஆரின் தொடர் புறக்கணிப்பு மக்களின் குரலை முடக்குவதாக உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். நீதிமன்றம், இது நீதி மறுஆய்வுக்கு உட்படுமா என விளக்கம் கோரியது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் இந்த சட்டப்பேரவை வருகை தெலுங்கானா அரசியல் மோதலை தீவிரபடுத்தியுள்ளது.
முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தாண்டி சந்திரசேகர் ராவின் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ், தனது தந்தை கேசிஆருக்கு இணையாக காங்கிரஸ் கட்சியில் யாருமே இல்லை என்று பேட்டி கொடுத்து எதிர்க்கட்சியினரை வெறுப்பேற்றி உள்ளார்.
இதையும் படிங்க: மனிதர்கள் இருப்பதை கண்டறிந்த நாய்கள்..! தெலுங்கானா சுரங்க விபத்தில் ட்விஸ்ட்