தண்ணியில எச்சில் துப்பி குடிக்க வச்சாங்க!! கேரளாவில் தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை..!
கேரளாவில் சீனியர் மாணவர்கள் தன்னுடைய சட்டையை கழட்டி முட்டி போட வைத்ததாகவும், எச்சில் துப்பிய நீரை குடிக்க வைத்ததாகவும் ஜீனியர் மாணவர் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் ராகிங் கொடுமை தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில் கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அங்கு முதலாம் ஆண்டு மாணவர்களை 3ம் ஆண்டு மாணவர்கள் காம்பஸ் உள்ளிட்ட கூர்மையான பொருட்கள் மூலம் குத்தி காயப்படுத்தியதுடன், அவர்களது அந்தரங்க உறுப்பில் டம்பில்ஸை தூக்கிப்போட்டு கொடூரமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் படிப்படை தொடரவோ, செவிலியர் பணியில் சேரவோ தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதேபோன்ற சம்பவம் திருவனந்தபுரம் காரியாவட்டம் அரசு கல்லூரியில் நடந்தேறியுள்ளது. இங்கு மூன்றாமாண்டு படிக்கும் சீனியர் மாணவர்களை ஜூனியர் மாணவர்கள் மதிப்பதில்லை எனக்கூறி ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தாக்கி உள்ளனர். போகுமிடம், வருமிடமெல்லாம் சீனியர் மாணவர்களின் அட்டூழியம் அதிகரித்ததால் முதலாமாண்டு பயோ டெக்னாலஜி படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி முதல்வர் இடத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மாணவரின் புகாரில் கல்லூரியில் ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் பயங்கர விபத்து: சீன பட்டாசுகளால் பற்றிய தீ- 25க்கும் மேற்பட்டோர் பரிதாபதம்..!
இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் புகாரளித்த மாணவரை கல்லூரி விடுதிக்குள் புகுந்து தேடி உள்ளனர். அவர் அப்போது அங்கு இல்லாததால் அவரது நண்பரை அடித்து இழுத்துச் சென்ற சீனியர் மாணவர்கள் கல்லூரிக்குள் உள்ள ரூமில் அடைத்து வைத்து அடித்துள்ளனர். மாணவரின் சட்டையை கழட்டி, முட்டி போட வைத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜூனியர் மாணவன், குடிக்க தண்ணீர் கேட்ட போது, ஒரு டம்ளர் தண்ணீரில் வாயை கொப்பளித்து அதை மீண்டும் டம்பரிலேயே துப்பிவிட்டு மாணவரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஜுனியர் மாணவர் அதை குடிக்க மறுக்கவே மீண்டும் அவரை கொடூரமாக தாக்கி உள்ளனர். உனது நண்பன் தான் உன்னை அடித்தான் என கல்லூரியில் சொல்ல வேண்டும். நாங்கள் தாக்கியதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஜூனியர் மாணவர் கழக்கூட்டம் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து கல்லூரி ராகிங் தடுப்புகுழு கல்லூரியில் விசாரணை நடத்தியது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் ஜூனியர் மாணவர் அளித்த புகார் உண்மை தான் என தெரியவந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடமும் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கல்லூரி முதவ்வர் சீனியர் மாணவர்கள் 7 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ராகிங் நடந்தது உறுதியானதைத் தொடர்ந்து ஜூனியர் மாணவனின் புகாரின் அடிப்படையில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வேலு, பிரின்ஸ், அனந்தன், பார்த்தன், அலன், ஷிரவன், சல்மான் ஆகிய 7 மாணவர்கள் மீது கழக்கூட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!