ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் நேற்று நடைபெற்று சுமார் 70%க்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி, சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன்,மற்றும், அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மாவதி, பாண்டியன் ஆகிய வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் பல தகவல்களை மறைத்து முறைகேடாக போட்டியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த கோரிக்கையை மட்டும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டு, தேர்தல் முடிந்து விட்டதால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை...