மஹாகும்ப மேளாவில் 1000 மரணங்கள்… உண்மையை மறைக்கிறதா அரசு..? நடாளுமன்றத்தில் பரபரப்பு..!
100 கோடி மக்களுக்கு ஒதுக்கீடு இருந்தபோது, ஏன் 10-20 கோடி கூட நிர்வகிக்க முடியவில்லை?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி நிலை அறிக்கையைவிட, மகாகும்பாபிஷேகம் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கேள்வி எழுப்பின.உண்மையான விவரங்களை கேட்டு எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. ஜனவரி 29 அன்று, பிரயாக்ராஜில் உள்ள சங்கம் மூக்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், இங்கு 30 பேர் மட்டுமே இறந்ததாக அரசும், நிர்வாகமும் கூறி அரசு மறைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் இன்னும் மக்களை அடையாளம் காண முடியவில்லை. பல மக்களை காணவில்லை, இது குறித்து போலீசாரிடம் எதுவும் கூற முடியவில்லை. காவல்துறையினருக்கு மட்டும் எதுவும் தெரியாது. அரசு உண்மையை மறைக்கிறது. கும்பலில் மக்கள் இறக்கும் போது, அரசு ஹெலிகாப்டர்களில் இருந்து மலர் மழை பொழிந்தது. இது சனாதன பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் செயலாகும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைதியாக இருப்பது ஏன்?'' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ''மகாகும்பத்தில் 1000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அரசு இதில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது. சரியான புள்ளிவிவரங்களை அரசு தெரிவிக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மகா கும்பத்தில் பிரதமர் மோடி... விஐபிகள் வருகையால் 'பிதுங்கல்ராஜ்'ஆகப்போகும் பிரயாக்ராஜ்..!
ராஜ்யசபா எம்பி ஜெயா பச்சன் இதுகுறித்து, ,''மகாகும்பத்தில் இறந்தவர்கள் கங்கையில் மூழ்கினர். அரசு உண்மையை மக்கள் முன் கொண்டு வரவில்லை. அரசாங்கம் ஏன் உண்மையை மறைக்கிறது என்பது புரியவில்லை.மகாகும்பத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அரசு இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளது.6 இடங்களில் நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் உள்ளன.விபத்துக்குப் பிறகு, மரணம் தொடர்பாக நிர்வாகம் ஒரே ஒரு அப்டேட் கொடுத்துள்ளது. இதற்குப் பிறகு, எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் அரசின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன'' எனக்குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து மகாகும்பத்திற்குச் சென்ற மூன்று பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த பசந்தி போடார், ஷல்போனியைச் சேர்ந்த ஊர்மிளா புயன் மற்றும் ஜமுரியாவைச் சேர்ந்த வினோத் ரூயிதாஸ் ஆகிய மூன்று பக்தர்களின் உடல்களுடன் இறப்புச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை.
இது குறித்து வங்காள அரசு அமைச்சர் அருப் பிஸ்வாஸ் கேள்வி எழுப்பினார். உ.பி.யில் மட்டுமே இந்த விதியை அமல்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார். புள்ளிவிவரங்களை அடக்க உ.பி அரசு இந்த மாதிரியான ஆட்டத்தை ஆடுகிறது.
அதே நேரத்தில், இதுபோன்ற பல புகார்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன, அங்கு நிர்வாகம் சாதாரண காரணங்களுக்காக இறந்தவர்களின் உறவினர்களை இறப்பு பதிவு செய்ய வைக்கிறது. அதன் பின்னரே உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.மகாகும்ப விழாவுக்கான ஏற்பாடுகளின் போது, 100 கோடி மக்களை குளிப்பாட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து உ.பி அரசு பேசியது. உ.பி. அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அழைப்புக் கடிதங்களை விநியோகித்தனர், ஆனால் மௌனி அமாவாசையை ஒட்டி நிலைமை முற்றிலும் சரிந்தது.
அகிலேஷ் யாதவின் சொல்படி, முதல் முறையாக மௌனி அமாவாசை நாளில், சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் பிரம்ம முகூர்த்தத்தில் குளிக்க முடியாது. சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.சங்கராச்சாரியார் இது குறித்து பேசும்போது ''100 கோடி மக்களுக்கு ஒதுக்கீடு இருந்தபோது, ஏன் 10-20 கோடி கூட நிர்வகிக்க முடியவில்லை? மக்களவையில் அகிலேஷ் யாதவ், அரசாங்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது, ஆனால் ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மகாகும்ப மேளா கூட்டத்தில் சிக்கி 30 பேர் பலி: 90 பேர் காயம்… உ.பி.அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!