சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி - அமைச்சர் ரகுபதி
சீமானை சமாளிப்பது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சீமான் மீதான பாலியல் வழக்கு அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாக மாறி உள்ள நிலையில், திமுகவின் பின்புலம் இருப்பதாக சீமான் புகார் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி பாலியல் குற்றவாளி என்று கூறுவீர்கள் - சீறும் சீமான்
இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சீமான் மீதான வழக்கில் திமுகவுக்கு எந்த பின்புலமும் கிடையாது என கூறினார்.
வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் நீதிமன்றத்தை நாடினார்.இதில் அரசு தலையிடவில்லை என கூறினார். மேலும் சீமானை சமாளிப்பது எல்லாம் தங்களுக்கு தூசு மாதிரி என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமானுக்கு மத்திய அரசு 'Y' பிரிவு பாதுகாப்பு..? அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்த சென்ற உளவுத்துறை..!