×
 

'கும்பமேளா பியூட்டி' மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு: " இதுதான் என் உலகம்..." டெண்ட் கொட்டாய் வீடு காட்டி வீடியோ போட்டு உருக்கம்..!

மகா கும்பமேளா.... 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பக்தி திருவிழா.

நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்து திருவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவின் சிறப்பு கூடிக் கொண்டே செல்கிறது. அதுவும் குறிப்பாக, மத்தியிலும், மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் இந்த ஆண்டு கும்பமேளா வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கவனம் பெற்றுள்ளது. 

முக்கியமான நாளான அமாவாசை தினமான நேற்று ஒரே சமயத்தில் பல கோடி பேர் புனித நீராட வந்ததால் ஏற்பட்ட நெருக்கடியில், 30 பேர் பலியானது துயர சம்பவம். அத்துடன் இன்று உள்படஅவ்வப்போது தீ விபத்து.. இப்படி எண்ணற்ற பக்கவாட்டு தகவல்களும் நாள்தோறும் ஏராளம். 

இதையும் படிங்க: 'மகா கும்பமேளா' நெரிசலில் 30 பக்தர்கள் பலி: நடவடிக்கை, வழிகாட்டுதல்கள் கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

இவை எல்லாவற்றைக் காட்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர், கும்பமேளாவில் அழகு தேவதையாக வலம் வந்த பாசிமணி மாலைகள், ருத்ராட்ச மாலைகள் விற்கும் 016 வயது அழகிதான் என்றால் அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

 அவருடைய பெயர் கூட முதலில் யாருக்கும் தெரியாது. உலகப் புகழ் ஓவியம் மோனாலிசாவின் பெயரையே அவருக்கு சூட்டி விட்டார்கள். 

அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவருடைய படங்கள் தான் வைரல். இது தவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் அவரைப் பற்றிய பதிவுகள் இல்லாத நாளே இல்லை என்கிற அளவுக்கு, எங்கு பார்த்தாலும் அவருடைய வீடியோக்கள்,0முகநூல் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் தான் வலம் வந்தபடிஉள்ளன. 

இதில் அவரைப் பற்றிய வதந்திகளுக்கும் பஞ்சமில்லை. சினிமாவில் நடிக்கப் போகிறார்.. பத்து நாளில் ரூ. 10 கோடி சம்பாதித்து விட்டார் 
... இத்யாதி இத்யாதி.. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்..!? 

மோனாலிசாவின் குடும்பமே மாலைகள் விற்கும் குடும்பம் தான். அவர்களுக்கு கிடைத்த அளவுக்கு அதிகமான விளம்பரத்தால் அவர்களுடைய மாலை வியாபாரம் பாதித்தது தான் எதார்த்தம். மோனாலிசாவிடம் மாலை வாங்குவதற்கு வந்தவர்களை விட அவரோடு செல்ஃபி எடுக்க வந்தவர்கள் தான் அதிகம். எப்போதும் இதற்காக ஒரு கூட்டம் அவர்களின் கூடாரத்தை சுற்றி சுற்றி வந்தது. 

ஒரு கட்டத்தில், படம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது மோனாலிசாவின் சகோதரர்களை கூட கூட்டத்தினர் தாக்கி இருக்கிறார்கள். இதனால் வேதனை அடைந்த மோனாலிசாவின் தந்தை பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெறுவதாக இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடாரத்தை காலி செய்து விட்டு சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலத்திற்கு குடும்பத்துடன்சென்று விட்டார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்ப செலவை சமாளிப்பதற்கு மோனாலிசாவின் தந்தை 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது சோகம் தான்.

அதன் பின்னும் அவர்களை யாரும் விட்ட பாடு இல்லை. அவர்களுடைய குலம் என்ன, கோத்திரம் என்ன? என்பதை பற்றி எல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் யூகித்தபடி பாசி மணி விற்கும் நாடோடி கும்பலை போன்றவர்கள் தான் ஒரு வகையில் அவர்களும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்ற பரம்பரை என முத்திரை குத்தப்பட்ட சமூகத்தில் இவர்களுடைய சமுதாயமும் ஒன்று.

அவர்களைப் பற்றி வெளிவந்த வதந்திகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த.. பத்து நாட்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார் என்பதுதான் உச்சம். இந்த நிலையில்  சொந்த ஊரில் தாங்கள் வசிக்கும் கூடாரம் போன்ற வீட்டில் இருந்து மோனோலிசா வெளியிட்டு இருக்கும் வீடியோ அவர்களின் நிலைமை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்துகிறது. 

 கும்பமேளாவால் அவர்களுக்கு வருமானம் இல்லை என்றாலும் இந்த வீடியோவில் மோனாலிசாவின் அழகுக்கும் சிரிப்புக்கும் நவரசஉடல் மொழிக்கும் பஞ்சமில்லை. இயல்பான வெள்ளந்தியான புன் சிரிப்பு.. கவர்ந்திழுக்கும் அந்த நீல நிற கண்கள்... இந்த வீடியோவிலும் அவற்றை மறக்க முடியவில்லை!

"இதுதான் என் உலகம்.. "
மனம் திறந்த மோனாலிசா

என்னதான் இன்றைய 'பான் இந்தியா' பிரபலம் போல் மோனலிசாவின் பெருமை பட்டி தொட்டி எல்லாம் கொடிகட்டி பறந்தாலும், இந்த கும்பமேளாவால் அவர்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பு தான் அதிகமே தவிர ஆதாயம் எதுவும் இல்லை. 

அந்த வீடியோவில் அவர், "இதுதான் எங்கள் உலகம்; நான் ஒரு விஐபி அல்ல; உங்களைப் போன்ற சாதாரணமான ஒரு பெண்தான்; உங்கள் ஆதரவு ஒன்றே போதும்" என மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். 

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு  இறுதியில் நமக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் ஒரு தகவல் என்ன வென்றால், வருங்காலத்தில் இந்த மோனாலிசா நிச்சயமாக திரை நட்சத்திரமாக அகில இந்திய அளவில் ஜொலிக்க போவது உறுதி. ஆம். அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் கோடி கோடியாக சம்பாதிக்க போகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில், புதிய சினிமா படத்தில் நடிப்பதற்கு அவரைத் தேடி வாய்ப்பு வந்துள்ளது. 

'பி.டி.சி.: நிறுவன செய்தியின் படி, சனோஜ் மிஸ்ராவின் "தி டைரி ஆஃப் மணிப்பூர்" என்ற திரைப்படம் தான் அது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் மகளாக நடிப்பதற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் மோனாலிசாவுக்கும் இராணுவத்தில் சேர ஆர்வம் மிகுந்த கதாபாத்திரம். 

ராணுவத்தில் இணைய லட்சியத்தோடு காத்திருக்கும் அவர் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக இடையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்த்து போராடி இறுதியில் தனது லட்சியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பெண்ணாக இந்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக இயக்குனர் சனோஜ் மிஸ்ரா 'இடிவி பாரத்: செய்தியாளரிடம் கூறியிருக்கிறார். 

இந்த படத்தின் மூலம் அவருடைய கஷ்டங்கள் தீருவது மட்டுமின்றி எல்லோரும் சொன்னது போல் கோடிகளில் அவர் சம்பாதிக்கும் காலமும் தொலைவில் இல்லை என நம்பலாம்.

இதையும் படிங்க: கும்பமேளாவின் கூட்டநெரிசல்களும், உயிரிழப்புகளும்: 1954 முதல் 2025 வரை ஒரு பார்வை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share