×
 

முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அதில் நீரை தேக்கி வைப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை; எனவே அணையில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை" என்று  அறிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும் விசாரணையின் போது "முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிப்பதில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுகுழு மிகவும் பயனுள்ளதாக இருக்குமா?; அல்லது 2021-ஆம் ஆண்டின் புதிய அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஒரு சட்டப்பூர்வக் குழுவிடம் அந்தப் பணியை வழங்க வேண்டுமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும் பதிலளிக்க வேண்டும்"என்றும் வாய்மொழியாக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது, மத்திய அரசு

நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் என் கே சீஸ் ஆகியோரை கொண்ட அமர்வில் நடந்த இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்ப வழக்குரைஞர் குமணன்,  "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது.

 ஆனால் அணையின் பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு இடையூறாக இருந்து வருகிறது. அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம். ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும். பேபி அணையை பலப்படுத்துதல், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கேரளா அரசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

 அதைத் தொடர்ந்து கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அணை பாதுகாப்பு தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 குறிப்பாக "அணை எங்களது மாநிலத்தில் உள்ளது.  அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக" தெரிவித்தார். இதை யடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  "இந்த விவகாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டு விட்டது. அதற்கு எந்தவித தடையும் கிடையாது. அது குறித்து மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் இரண்டு முறை தெளிவான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

 "அணை விவகாரத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரித்து முடிவு எடுக்கலாம்" என்று கூறிய நீதிபதிகள், மீண்டும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share